பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 527 ஒருவர் காலை எழுந்தவுடன் முதலில் உடம்பைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சாணத்தால் மெழுகி தூய்மை செய்ய வேண்டும். பக்கத்தில் ஒரு விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். விஷ்ணு விக்கிரகத்தை அந்தத் தூய்மையான இடத்தில் வைத்து, மலர்களாலும் மாலையாலும் அலங்கரிக்க வேண்டும். பால், நெய் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு விஷ்ணுவின் புகழைப் பாட வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாகத் தேவைப்படுவது தூய்மையான மனத்துடன் விஷ்ணு இடத்தில் அன்பு செய்வதாகும். இதற்கடுத்த படியாக ஒருவன் மறுபிறப்பில் மிருகமாகவோ, பறவையாகவோ பிறக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரேவழி நேர்மையான வழி நடத்தல், விரதங்களை மேற் கொள்ளல், பெற்றோர்களை மதித்து நடத்தல், காகமுகா என்ற தீர்த்தத்தில் உயிரை விடும் ஒருவன் உறுதியாக மறுபிறப்பில் மிருகமாகவோ பறவையாகவோ பிறக்கமாட்டான். இதற்கு ஒரு உதாரணக் கதையை வராகம் கூறிற்று. ஒருமுறை ஒரு வல்லுறு மிக வேகமாகத் தண்ணிரில் பாய்ந்து ஒரு பெரிய மீனைக் கவ்வி அதை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் எழுந்தது. மீனின் கனம் தாங்காமல் வல்லுறும், இருந்ததால் அந்த மீனும், அதில் முக்கிக் குளித்து எடுத்ததால் வல்லூறும் இப்பிறவி நீங்கி மீன் ஒரு ராஜகுமாரனாகவும், வல்லுறு ஒரு அரசகுமாரியாகவும் பிறந்தன. அந்த அரச குமாரியை, அந்த அரசகுமாரன் மணந்து கொண்டான். சில நாள் கழித்து, அரச குமாரனுக்குத் தீர்க்க முடியாத தலைவலி வந்தது. தாய் தந்தையரிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் கோகமுகா தீர்த்தத்திற்கு வந்தார்கள்.