பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 529 களைந்து வைத்து விட்டுத் தண்ணிரில் குளிக்கச் சென்றாள். நீரில் பாய்ந்த அப்பெண் எதிர்க்கரையில் சோமசர்மாவாக வெளியே வந்தார். தன் உடைகளை மாற்றிக் கொண்டு, தான் நிஷாதப் பெண்ணாக இருந்ததை நினைத்தார். அப்பொழுது எதிர்க்கரையில் அந்த நிஷாதப் பெண்ணின் கணவன் கரைக்கு வந்து மனைவியின் துணிகள் இருப்பதைப் பார்த்து அவள் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டாள் என்று கருதி 'ஒ' என்று கதறி அழுவதைக் கண்ட சோமசர்மா அவனுக்குச் சமாதானம் சொல்லி வீட்டிற்குச் சென்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறு புத்திமதி சொன்னார். அந்த நிஷாதன் கவலை குறையாமல் அழுததைக் கண்டு, உண்மையைக் கூறிவிடலாமா என்று கூட சர்மா நினைத்தார். அந்த நிலையில் விஷ்ணு தோன்றியவுடன் சர்மாவைப் பார்த்து எதிர்க்கரையில் பார்’ என்று கூறினார். இங்கு விஷாதர்கள் தங்கிய எந்த ஒரு அடையாளமும் இல்லை. இதுதான் மாயையின் செயல். மானிடர்கள் மாயையின் செயலை அறியாமல் இருப்பதே சிறந்தது என்று கூறினார். சோமசர்மா வீட்டிற்கு வந்ததும், பக்கத்தில் உள்ள முனிவர்கள் ஒன்று சேர்ந்து, குளிக்கச் சென்ற நீ இவ்வளவு நேரம் கழித்துவரக் காரணம் என்ன என்றார்கள். அதற்கு விடைகூற விரும்பாத சோமசர்மா குப்ஜம்ரகாதீர்த்தம் சென்று கடுமையான விரதம் அனுஷ்டித் தாா. மதுராவின் சிறப்பு பல ஊர்களின் சிறப்பினைச் சொல்லிக் கொண்டு வந்தது வராகம். நைமிசாரண்யம், பிராயாகை, புஷ்கரா, வாரணாசி ஆகிய அனைத்திலும் மேம்பட்ட சிறப்பினை உடையது மதுரா. மதுராவில்தான் விஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்தார். աւ.-34