பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 பதினெண் புராணங்கள் நைமிசாரண்யத்தில் இருந்து மதுரா வந்த தாழ்ந்த ஜாதிக்காரன், சதுர்த்தசி திதியில் யமுனையில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்துவிட்டான். மதுராவில் உள்ள யமுனையில் இறந்த கூத்திரிய மன்னன் யங்ஷமாதனுவாகப் பிறந்தான். அவன் மனைவி பிவரி என்பவள், தன் கணவன் உறக்கத்தில் பெருமூச்சு விடுவதையும், முனகுவதையும் கண்டு அதன் காரணத்தைக் கேட்டாள். அரசினை மூத்த மகனிடம் ஒப்பித்து விட்டு மதுராவிற்குத் தன்னுடன் வருவதானால் அந்த ரகசியத்தைச் சொல்வதாக மன்னன் கூறினான். மனைவி அதற்கு உடன்பட அரசை மகனிடம் கொடுத்துவிட்டு இருவரும் மதுரா வந்து சேர்ந்தனர். அங்கே வந்து யமுனையில் குளித்ததும் அந்த அரசிக்கு அவள் பழம் பிறப்பு நினைவுக்கு வந்தது. அவள் பழம்பிறப்பில் யமுனையைக் காணும் பொழுது நீரில் மூழ்கி இறந்ததால் காசிராஜன் மகளாகப் பிறந்து செளராஷ்டிர மன்னனாகிய யக்ஷ மாதனுவைத் திருமணம் செய்துகொண்டாள். அரசன் பெருமூச்சு விட்டதற்குக் காரணம் போன பிறப்பில் அவள் மதுராவில் பிறந்து இறந்ததால். இந்தப் பிறப்பில் அங்கே போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் பெருமூச்சு விட்டதாகக் கூறினான். இருவரும் அங்கேயே தங்கி மோட்சம் போயினர். ஏனைய புராணங்களைப் போலவே வராக புராணமும் அதைக் கற்பதாலும், கேட்பதாலும் உண்டாகும் பலன்களைக் கூறி முடிக்கின்றது.