பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 533 யாகத்தைக் காணவந்த லோமஹர்ஷனரைப் பார்த்து முனிவர்கள் புலோமஹர்ஷனரே! நீங்கள் வேதவியாசரின் சிட்ராயிற்றே. சிவனுடைய பெருமையை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொள்ள, அவர் சொல்ல ஆரம்பித்தார். தட்சயாகம் தட்சப் பிரஜாபதி என்பவன் தன் மகளாகிய தாட்சா யணியைச் சிவனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தான். திருமணத்திற்குப் பிறகு தன் மருமகனாகிய சிவன் தனக்குரிய மரியாதை தரவில்லை என்று தட்சன் மனம் புழுங்கினான். அந்தப் புழுக்கத்தின் காரணமாக அவன் சிவனையும், தாட்சாயணியையும் கண்ட இடங்களிலெல்லாம் தரக் குறைவாகப் பேசி வந்தான். சிவனை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் தட்சன் ஒரு யாகத்தைத் தொடங்கினான். தெய்வங்கள், தேவர்கள், முனிவர்கள் ஆகிய அனைவரையும் அந்த யாகத்திற்கு வருமாறு அழைப்பு அனுப்பிய தட்சன் வேண்டுமென்றே சிவனை, தாட்சாயணியை அழைக்காமல் விட்டு விட்டான். என்றாலும் தந்தையின் யாகத்தைக் காணவேண்டு மென்று வந்த தாட்சாயணியையும் யாகத்திற்கு வந்திருந்த வர்கள் எதிரே தரக்குறைவாக இழித்துப் பேசினான் தட்சன். சிவனைப் பற்றிய அவதூறுகளைக் கேட்கச் சகியாத தாட்சாயணி யாக குண்டத்தில் விழுந்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாள். சிவனுடைய பணியாளர்கள், சிவகணங்கள் ஆகியவர்கள் மிகக் கொடுமையான ஆயுதங்களைத் தாங்கி யாகசாலைக்கு