பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/563

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


534 பதினெண் புராணங்கள் விரைந்தனர். சினம் கொண்ட சிவன் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு முடியை எடுத்துக் கீழே எறிந்தவுடன் அந்த முடி ஒரு பயங்கர உருவமாகப் பரிணமித்தது. மூன்று கண்களையும், ஆயிரம் கைகளையும், வீரபத்திரர் என்ற பெயரையும் கொண்ட அவ்வுருவம் சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் அமர்ந்திருந்தது. சிவன் விட்ட உஷ்ணமான பெருமூச்சிலிருந்து பல கிருமிகளும், அழிவைத் தரும் கிருமிகளும் வெளிவந்தன. அதன் மூச்சிலிருந்து மகாகாளி உதயமாயினாள். அந்தக் கூட்டம் முழுவதும் தட்சன் யாக சாலையில் புகுந்தது. பிருகு, புஷா போன்ற முனிவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரையும் சூரியனின் அம்சம் என்றும் கூறுவர். தட்சனை நேசித்து யாகத்திற்கு வந்த பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரும் தோற்கடிக்கப்பட்டனர். தட்சன் தலை அறுக்கப் பட்டது. வீரபத்திரனும், அவனது படையும் முழு அழிவை ஏற்படுத்தின. தட்சனின் தந்தையாகிய பிரம்மன் சிவனிடத்தில் வேண்டிக் கொள்ள, எல்லையற்ற கருணையுடன் சிவன் யாகசாலைக்கு வந்தார். அனைத்தையும் பார்வையிட்ட அவர், தட்சனை மன்னித்து அவனை மீண்டும் உயிர்ப்பிக்க எண்ணினார். ஆனால் தட்சன் தலை அறுத்த வீரபத்திரன், அத்தலையை யாக குண்டத்தினுள் போட அத்தலை முழுவதும் எரிந்து சாம்பலாயிற்று. வேறு வழியின்மையின், ஒரு வெள்ளாட்டுத் தலையை அறுத்து தட்சன் உடம்பில் ஒட்டவைத்து அவனை உயிர்ப்பித்தார் சிவன். அவமானப்பட்ட தட்சன், சிவனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். முற்றும் அழிந்து விட்ட யாகசாலையை அதன் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார் சிவன். அன்றிலிருந்து தட்சன் பெரிய சிவ பக்தன் ஆனான.