பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 பதினெண் புராணங்கள் சிவலிங்கத்தைக் காணாமல் மனம் நொந்துபோனான். தான் கொண்டு வந்திருந்த வில்வம், மான்கறி என்பவற்றுடன் தன்னுடைய குடலையும் அறுத்தெடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தில் போட்டு விட்டுக் கதறி அழுதான். அவனுடைய பக்தியை மெச்சிய சிவன், "வேடனே! நீ கைலயங்கிரிக்கு வந்து எனக்கு அணுக்கத் தொண்டனாகிப் பணிபுரிவாயாக’ என்று வரங்கொடுத்து மறைந்தார். இதைக் கண்டு கொண்டிருந்த நந்தி, வேடனை அணுகி தயவு செய்து என்னைப் பற்றியும் சிவனிடம் எடுத்துக்கூறி எனக்கு கைலாயத்தில் ஒரு பணியை வாங்கிக் கொடு என்று கெஞ்சினான். உடனே வேடன் பெரிய குரலில், “சிவனே! இங்கிருக்கும் நந்தி வைசிய குலத்தைச் சேர்ந்தவன், பெரிய சிவ பக்தன். தயவு செய்து கைலையில் இவனுக்கும் ஒரு இடமளிக்க வேண்டும்” என்று மனமுருக வேண்டினான். சிவன் வெளிப்பட்டு வேடனே! நீ சிவபக்தன் என்று குறிப்பிடும் யாரையும் எனக்குத் தெரியாது. என்னுடைய பக்தர்கள் படாடோபம் இல்லாமல் மிக எளிமையாக முழுமனத்தோடு, உள்ளன்போடு என்னை வழிபடுவார்கள். அவர்களுக்குத்தான் நான் எளிமையாகக் காட்சி தருவேன்” என்று கூறினார். ஆனாலும் வேடன் விடாமல் சிவனைக் கூவி அழைத்து என்னிடம் ஒயாது உன் அருளைப் பெறுவேன் என்று என்னை வேண்டிக் கொள்ளும் இந்த வைசியனுக்கு எப்படியும் கைலையில் ஒரு இடம் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மனமிரங்கிய சிவன் நந்திக்கும் தன் காவலர்களில் ஒரு இடத்தைத் தந்தார். இக்கதை கூர்மபுராணத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது) சிவ புண்ணியத்தைச் செய்பவர்கள் சிவலோகம் செல்வர். சிவன் கோயிலில் கைகளால் கூட்டி மெழுகுதலும், கால்களால்