பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 பதினெண் புராணங்கள் கொண்ட நந்தி, "விலங்கினாலேயே உனக்கு மரணம் ஏற்படும்” என்று சாபம் கொடுத்தார். பின்னர் ராமனுடன் சென்ற படைகள் நந்தியின் முகத்தைப் பெறாமல் குரங்கு முகங்களைப் பெற்றிருக்குமாறு சிவன் அந்தச் சாபத்தை மாற்றி அமைததாா. நீலகண்டர் அமிர்தத்தைப் பெறவேண்டுமென்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையப் புறப்பட்டனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் வைத்துக் கடைய முற்பட்டபொழுது, மத்து தங்குவதற்கு அடை இல்லாமையால் கடைய முடியவில்லை. விஷ்ணு கூர்ம வடிவம் கொண்டு மேருமலையை முதுகில் தாங்கினார். அதனால் பாற்கடல் கடையப்பட்டது. தேவர்களுடைய பேராசை காரணமாக கடைய வேண்டிய வேகம் அதிகப் படுத்தப்பட்டவுடன், பாற்கடலிலிருந்து மிகப் பெரிய விஷம் வெளியே வந்து தேவருலகம் முழுவதையும் மூடிக் கொண்டது. அதன் பயனாகத் தேவர்கள் உடல் கருத்தனர். விஷ்ணுவோ விஷம் பரவியதால் நீல நிறத்தைப் பெற்றுவிட்டார். யாரும் தாங்க முடியாத நிலை வந்தவுடன் கணேசர் சிவனிடம் சென்று உலகைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய வுடன் சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டு விட்டார். அது அவர் கண்டத்தில் தங்கி, அதனை நீலநிறமாக மாற்றி விட்டது. அதிலிருந்து அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது. ராகு என்ற பாம்பு பல தலைகளைக் கொண்டதால் தேவர்களை மிகவும் அச்சுறுத்தி வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் அந்தப் பாம்பின் தலைகளை எல்லாம் கிள்ளிப் போட்டு விட்டு ஒரே தலையுடன் இருந்த ராகுவை