பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பதினெண் புராணங்கள் மீண்டு வராமையால் மிருத்யு (சாவு) என்ற தன் தோழனை அனுப்பினான் யமன். மிருத்யு பாசக் கயிற்றை சுவேதாவின் கழுத்தில் மாட்ட முயன்ற பொழுது சிவ கணங்களால் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட யமன் தானே படைகளுடன் வந்து போர் தொடங்கினான். சிவனுடன் இருந்த நந்தி, விக்னேஷ்வரன், கார்த்திகேயன் ஆகிய அனைவரும் யமனுடன் போர் தொடுத்தனர். இப்போரில் கார்த்திகேயன் யமனையும் கொன்றுவிட்டான். யமன் இல்லையானால் சாவு, வாழ்வு நடைபெறாது என்பதை அறிந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். ஒரு நியதியின் பேரில் சண்டையை நிறுத்த சிவன் ஒப்புக் கொண்டார். சிவ பக்தர்கள் இறந்தால் யம துTதர்கள் அங்கே வரக் கூடாது. அவர்கள் நேரே சிவலோகம் சென்று விடுவர். இதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள, நந்திதேவர் கங்கைத் தண்ணீரைக் கொண்டு வந்து யமன், மிருத்யு.மேல் தெளிக்க அவர்கள் உயிர் பெற்றனர். கெளதமி கங்கையின் சிறப்புக்களுள் இதுவும் ஒன்று. குபேரன் விஸ்ரவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவியின் மகன் குபேரன். பெருஞ் செல்வத்துடன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான். அரக்கியாகிய இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர். முதலில் இவர்கள் குபேரனுடன் நட்புடன் இருந்தனர். இராவணன் தாய் மகனை அழைத்து, “நீ அரக்கன்; குபேரன் தேவ வர்க்கம். நீங்கள் எல்லோரும் நட்புக் கொள்வது தவறு. காலங்காலமாக தேவர்களுக்குப் பகை அரக்கர்களும், அசுரர்களும். அவனை எப்படியாவது வென்று அவன் செல்வத்தை நீ பறித்துக் கொள்” என்று கூறினாள். இராவணன் முதலிய மூவரும் பிரம்மனைக் குறித்துப் பெரும்