பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 பதினெண் புராணங்கள் போலவே வழங்கும் மார்க்கண்டன் கதையும், திருக்கடவூரில் இந்திகழ்ச்சி நடந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுக் கதையில் சிவன், காவனைக் காவால் உதைத்தான் என்றுதான் கூறப்படுகிறது ஒருமுறை கந்தமாதனத்தில் சிவனும் பார்வதியும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவ்விடத்திற்கு வந்த நாரதர் பார்வதியைப் பார்த்து நீங்கள் இவ்வாறு பொழுது போக்குவதற்காகச் சூதாட்டத்தில் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார். அவருடைய பேச்சைக் கேட்டுச் சூதாட்டத்தில் நாட்டம் கொண்ட பார்வதியும் சிவனும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நாரதர் சிவனுக்குதவியாக இருக்க சிவனும் பார்வதியும் விளையாடினர். நாரதர் சூழ்ச்சியால் ஒரு சிறிய தந்திரத்தைக் கையாண்டு சிவன் வென்றுவிட்டார். பார்வதிக்கு எல்லையில்லாத் துயரம் உண்டாயிற்று. குறுக்கே புகுந்த நாரதர், இது என்ன பிரமாதம் இந்த மூன்று உலகத்தில் சிவனை வெல்வார் யாருமில்லை. ஆகவே அவரிடம் தோற்ப தென்பது பெரிய அவமானமன்று என்று தூபம் போட்டார். மறுபடி ஒருமுறை ஆடவேண்டும் என்று முடிவு செய்து ஆடத் தொடங்கினர். இம்முறை சூதாட்டத்தில் பார்வதி வென்று விட்டார். சிவனையும், நாரதரையும் பார்த்து ஏதோ வெல்லவே முடியாது என்று கூறினர்களே, இப்பொழுது என்னவாயிற்று என்று பார்த்தீர்களா? பார்வதி ஆகிய நானில்லாமல் சிவன் ஒன்றும் செய்துவிட முடியாது. இவருக்கு இந்நிலையைத் தந்ததே நான்தான் என்றுகூறி, தான் ஜெயித்ததற்கு அடையாளமாகச் சிவன் முடியிலிருந்த சந்திரன் முதலான வற்றைப் பந்தயப் பொருளாகப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் பிருங்கி முனிவர் அங்கு வந்து “தாயே! நீங்கள் பேசுவது நியாயமில்லை. எந்த உலகத்திலும் சிவனை வென்றவர் யாருமில்லை. இமவான் புத்திரியான தாங்கள் பல