பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 29 தவம் செய்து பல வரங்களைப் பெற்றனர். அதன் பயனாக குபேரனை வென்று இலங்கையை விட்டே விரட்டி விட்டனர். தாத்தாவாகிய புலத்தியனுடைய அறிவுரையின்படி குபேரன் கெளதமி கங்கையின் கரைக்கு வந்து சிவனைக் குறித்துப் பெரும் தவம் இயற்றினான். இறுதியில் சிவன் தோன்றி, குறையாத செல்வத்தின் தலைவனாக குபேரனை ஆக்கினார். அரிச்சந்திரன் கதை இக்சுவாகு பரம்பரையில் வந்த அரிச்சந்திரனுக்கு மகன் இல்லை. நாரதர் அரிச்சந்திரனைப் பார்த்து, “நீ கங்கைக்கரை சென்று வருணனைக் குறித்துப் பிரார்த்தனை செய்தால் உனக்கு மகன் பிறப்பான்” என்று கூறினார். அரிச்சந்திரன் அவ்வாறே செய்தான். அவன் முன் தோன்றிய வருணன், "உனக்கு ஆண் குழந்தை பிறக்குமாறு வரம் தருகிறேன். ஆனால் என்னைக் குறித்து ஒரு யாகம் செய்து அதில் உன் மகனை பலியிடுவதானால் உனக்கு ஆண் மகவு பிறக்கும்” என்றான். அரிச்சந்திரன் அதனை ஒப்புக் கொண்டான். மகன் பிறந்த ஏழாம் நாள், ஏழாம் ஆண்டு, பதினாறாம் ஆண்டு முடியும் பொழுதெல்லாம் வருணன் வந்து எப்பொழுது யாகம் என்று கேட்கும்பொழுதெல்லாம் அரிச்சந்திரன் ஒவ்வொரு சமாதானம் கூறினான். மகனுக்குப் பதினாறு வயதாகும் பொழுது வருணன் மறுபடியும் வந்து கேட்டான். உடன் இருந்த மகன் ரோஹிதன் 'விஷ்ணுவைக் குறித்து யாகம் செய்யப் போகிறேன். முடிந்தவுடன் உனக்கு பலியாவேன்' என்றான். யாகம் செய்யக் காட்டிற்குச் சென்றபொழுது 'அஜிகர்தா என்ற முனிவனைச் சந்தித்து தன் வரலாற்றைக் கூறினான். அதுகேட்ட முனிவன் தன் மூன்று பிள்ளைகளுள் தனக்கு வேண்டிய முதல் மகனையும், மனைவிக்கு வேண்டிய மூன்றாவது பிள்ளையையும் விட்டுவிட்டு நடு மகனைப்