பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 551 காலம் தவம் செய்து சிவனை அடைந்ததை மறந்து விட்டீர்களா? இதற்கு முன்பிறவியில் தட்சன் மகளாகப் பிறந்தது நினைவில்லையா? யாக சாலையில் பலருடைய முன்னிலையில் சிவனை அவன் இழித்துப் பேசினான். அதை என்னால் \ பொறுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டுதானே யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டீர்கள். அப்படி இருக்க இப்பொழுது சிவனைக் குறை கூறுவது நியாயமா? தாங்களே அவருக்கு சக்தி, பதவி என்று கூறுவது எவ்வளவு பொறுத்தமற்றது என்று கூறினார். பார்வதி சிறிதும் மனம் மாறாமல் இருந்து விட்டார். ஆனால் சிவன் மிக்க கோபத்துடன் கந்தமாதனத்தை விட்டு வெளியேறி சித்தாடவி என்ற காட்டின் நடுவே சென்று தவத்தில் அமர்ந்து விட்டார். அவரைத் தவிர குபேரன் உள்பட அனைவரும் கைலை மலையிலேயே இருந்தனர். சிறிது காலம் கழித்து சிவனை விட்டுப் பிரிந்து இருக்க முடியாத பார்வதி அழகிய பெண்வேடம் கொண்டு சிவன் தவம் செய்யும் இடத்தில் சென்று அவர் தவத்தைக் கலைத்தார். இப் பெண்ணின் அழகில் ஈடுபட்ட சிவன், என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்டார். அந்தப் பெண், எனக்கு ஒன்றும் தடையில்லை. என் தந்தை இமவானிடம் வந்து நீர் சம்மதம் பெறவேண்டும் என்றாள். சிவன் இமவானிடம் செல்ல, இமவான் சிரித்துக் கொண்டே நீங்கள் புதிய மருமகனாக வரவேண்டியதில்லை. எனது பழைய மருமகன் தான் நீங்கள் என்று சொல்ல, நாரதர் அங்குத் தோன்றி, ‘ஐயனே! நம்முடைய பிரச்சனைக்கெல்லாம் காரணம் பெண்களே! தாங்கள தவம் செய்து கொண்டிருந்ததைக் கலைத்ததும் ஒரு பெண்தான்” என்றார். இவற்றைக் கேட்ட சிவன் மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்து கந்தமாதனத்திற்குத் தவம் செய்யப் போய்விட்டார். சிலகாலம் கழித்து சிவனில்லாத