பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 பதினெண் புராணங்கள் கைலாசம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்த பார்வதி, இமவானுடன் அங்குக் கூடியிருந்த பக்தர்கள் பலரையும் அழைத்துக் கொண்டு கந்தமாதனம் சென்றார். சிவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு கைலாயம் வந்தனர். இந்திரன் எங்கே ? இந்திரன் அரண்மனையில் யாகம் நடந்து கொண்டிருந்தது. அந்த யாகத்தை முன்னின்று நடத்தியவன் விஸ்வகர்மாவின் மகன் விஸ்வரூபன். இந்த விஸ்வரூபனுக்கு அசுரர்கள் மேல் ஒரளவு அன்பு இருந்தது. இதன் காரணமாக யாகத்தில் பலியிடும்போது தேவர்களுக்கு பலியிடுகையில் கூடவே அசுரர்களுக்கும் பலியிட்டு வந்தான். இந்த ரகசியத்தை அறிந்து கொண்ட இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் விஸ்வரூபனைக் கொன்றுவிட்டான். விஸ்வகர்மாவும், விஸ்வரூபனும் பிராமணர்கள். ஆகையால் பிராமணனைக் கொன்ற பிரம்ம ஹத்தி தோஷம் இந்திரனைப் பிடித்துக் கொண்டது. மிக்க கடுமையான பிரம்மஹத்தியால் துரத்தப்பட்ட இந்திரன் எங்கு சென்றும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு குளத்திற்குச் சென்று நீருக்கடியில் மறைந்து கொண்டான். அவன் வெளியே வரும்பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி காத்துக் கொண்டிருந்தது. அமர லோகத்தில் இந்திரன் இல்லாமையால் அரசன் இல்லாத மூன்று லோகங்களும் துன்பத்திற்குள்ளாயின. பஞ்சம், வறட்சி, பசி என்பவை அனைவரையும் பிடித்து வாட்டலாயிற்று. நாரதரின் அறிவுரையின் பேரில் நகுஷன் என்பவன் இந்திரனாக்கப் பட்டான். ஆனால் அவன் அகஸ்தியரால் சபிக்கப்பட்டு பாம்பாக மாறிவிட்டான். அடுத்து யயாதியை இந்திரனாக்க முயன்றனர். அளவு மீறிய தற்பெருமை உடைய அவன்தான்