பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 553 இதுவரை செய்த நற்காரியங்களைத் தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்திரப்பதவி தன்னைத் தேடிவந்தது தன் புண்ணியத்தின் காரணமாகத்தான் என்று பெருமைப்படத் தொடங்கினான். இதனால் அவனுக்கும் இந்திரப்பதவி நிலைக்க வில்லை. வேறு வழியின்றிப் பழைய இந்திரனையே கொண்டு வர வேண்டுமென்று தேவர்கள் முடிவு செய்தனர். நாரதர் பழைய இந்திரனைக் கூப்பிட்டவுடன் அவன் பிரம்மஹத்தி யிடம் நிலைமையை விளக்கினார். பிரம்மஹத்தி இந்திரனை விட்டால் எனக்கு இடம் எங்கே என்று கேட்க, தண்ணிர் ஒடுகின்ற ஆறு, அதன் பக்கத்தில் உள்ள மரம், பூமியில் ஏதாவது ஒரு பகுதி, ஏதாவது ஒரு பெண் இந்த நான்கிலும் பிரம்மஹத்தி வாழலாம் என்று கூறியவுடன், பிரம்மஹத்தி இந்திரனை விட்டு விட்டது. இந்திரனைக் கொண்டு வந்து மிக்க ஆடம்பரத்துடன் முடிசூட்டினான். விருத்திராசுரன் கதை விஸ்வகர்மாவின் மகன் விஸ்வரூபனைக் கொன்ற தோஷத்தில் இருந்து இந்திரன் தப்பித்துக் கொண்டாலும், விஸ்வகர்மா இந்திரனை மன்னிக்கத் தயாரில்லை. தன் மகனைக் கொன்றதற்கு இந்திரனைப் பழிவாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த விஸ்வகர்மா மிகப் பெரிய தவத்தில் ஈடுபட்டான். பிரம்மன் எதிர்ப்பட்ட பொழுது இந்திரனைக் கொல்லத் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று விஸ்வகர்மா கேட்க, பிரம்மன் அப்படியே ஆகட்டும் என்றார். அதன் பயனாகப் பிறந்தவன்தான் விருத்திரன். சிறு குழந்தையாகப் பிறந்தவுடனேயே நாள் ஒன்றுக்கு மூன்று வில் உயரம் வளர்ந்தான். பயங்கரமான வடிவுடன் திகழ்ந்தான். சிவனைக் குறித்துப் பெரும் தவம் செய்து நினைத்தற்கரிய பேராற்றலைப்