பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 + பதினெண் புராணங்கள் பெற்றான். இந்திரனுடன் போருக்குச் சென்றபொழுது இந்திரனைச் சேர்ந்த அனைவரும் விருத்திரன் எதிரே நிற்க முடியாமல் ஓடிவிட்டனர். இந்திரன் மட்டும் நின்று வஜ்ராயுதத்தை அவன் மேல் ஏவ, அதை எளிதாகக் கையில் பிடித்த விருத்திரன் மறுபடியும் இந்திரன் மேல் அதை வீசினான். வஜ்ராயுதம் இடியோசையுடன் சென்று இந்திரன் நெஞ்சைத் தாக்க அவன் கீழே விழுந்தான். இப்படிப் பலமுறை விருத்திரனிடம் தோற்ற இந்திரன் கடைசியாகச் சூழ்ச்சி செய்து விருத்திரனிடம் நட்பு பாராட்டுவது போல் பொய் நட்புக் கொண்டு, இறுதியில் சூழ்ச்சியாலேயே அவனைக் கொன்று விட்டான். கந்த புராணத்தில் வரும் இக்கதையில் விருத்திரன், இந்திரன் ஆகிய இருவரும் பிரதோஷத்தன்று போரிட நேரிட்டது என்றும், விருத்திரன் விரதத்தில் தவறு செய்ததால் இறக்க நேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் விரோசனன் என்ற அசுரனுக்கு பலி மகனாகப் பிறந்தான். குலகுருவாகிய சுக்ராச்சாரியாரை வைத்துக் கொண்டு மிகப் பெரிய யாகம் ஒன்று செய்ய அந்த யாக குண்டத்தில் இருந்து அற்புதமான நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய ஒரு ரதம் வந்தது. அதில் ஏறிக் கொண்டு தேவருலகத்தை வென்று இந்திரனை விரட்டி விட்டான். தேவர்கள் மனித உருத்தாங்கி உலகத்தில் திரியலாயினர். இந்திரப் பதவியில் அமர்ந்த பலி இயல்பாகவே வள்ளல் குணம் படைத்தவன் ஆதலால் யார் எது கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்புடையவன். இந்தக் குணம் அவனது பூர்வ ஜென்ம வாசனையால் வந்தது. பலி முன்ஜென்மத்தில் கிட்டவா என்ற பெயருடன் வாழ்ந்தான். எல்லாத் தீமைகளுக்கும் ஒரு கொள்கலமாக