பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 பதினெண் புராணங்கள் (பாகத்தில் வாமனன் வந்ததும், மூன்றடி மண் கேட்க சுக்ராச்சாரி, இவன் விஷ்ணு, ஆகவே இவனுக்குக் கொடுக்காதே என்று செ7ன்னதும், முன்னர் பல புராணங் களிலும் வந்துள்ளது, இதற்கு மேல் ஸ்கந்த புராணம் புதுமையான சில செய்திகளைக் கூறுகிறது. சுக்ராச்சாரி சொன்னதும் பலி, வந்திருப்பது விஷ்ணு என்பதை நான் நன்கு அறிவேன். அவன் எனக்கு விடுதலை நல்கவே வந்திருக்கிறான். ஆகவே அவன் கேட்ட மூன்றடி நிலத்தைத் தரத்தான் போகிறேன்’ என்று கூறினான். கக்ராச்சாரி மிகுந்த கோபத்துடன் யாகசாலையை விட்டுப் போய்விட்டார். வாமனன் விரும்பியபடியே பலி தாரை வார்த்துக் கொடுத்தான். வாமனன் வளர்ந்து பூமியையும், ஆகாயத்தையும் இரண்டடிகளால் அளந்த பிறகு தன்னுடைய உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, பலியின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். இப்பொழுது விஷ்ணு தான் ஒன்றும் பேசாமல் கருடனை அழைத்தார். அங்கே வந்த கருடன் பலியைப் பார்த்து, விஷ்ணுவின் மூன்றாவது அடிக்கு இடமெங்கே, நீ உன் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்று சொல்லிக் கயிற்றால் பலியை இறுக்கக் கட்டிவிட்டான் கருடன். இதை அறிந்த பலியின் மனைவி விந்தியவலி அங்கே வந்து கருடனைப் பார்த்து, என் கணவன் கொடுத்த வாக்கை மீறமாட்டான். உனக்கு வேண்டியது மூன்றாவது அடியை வைக்க வேண்டிய இடம்தானே. முதலில் அவரை அவிழ்த்து விடு, நான் காட்டுகிறேன் என்றாள். உடனே விந்தியவலி விஷ்ணுவைப் பார்த்து, இதோ என் குழந்தையின் தலை, என் தலை, என் கணவன் தலை ஆகிய மூன்று இடங்கள் உள்ளன. தங்கள் மூன்று அடியால் எங்கள் தலைமேல் வைத்து அந்த இடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றான். மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, “கீழ் உலகத்தில் சுதாலா என்ற இடத்தில் சென்று