பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/586

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்கந்த புராணம் 557 நீ உன் மனைவி மகனுடன் தங்குவாயாக’ என்றார். அது கேட்ட பலி எங்கேயும் சென்று தங்கி உயிர் வாழும் ஆசை எனக்கில்லை. விஷ்ணுவின் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று வேண்டினான். அது கேட்ட விஷ்ணு, கவலை வேண்டாம். நீ இருக்கின்ற இடத்தில் உன் கூடவே நான் இருப்பேன் என்று கூறியவுடன் பலி மகிழ்ந்து சுதாலாவிற்குள் தங்கினான். இந்தக் கதையில் சிவனுக்கு ஒன்றும் இடமே இல்லை என்றாலும் பலியாகப் பிறந்தவன் பூர்வத்தில் கிட்டாவாயாக இருந்து மனத்தினால் சிவபூஜை செய்ததால்தான் இந்திரப் பதவியும், பலியாகப் பிறக்கும் புண்ணியமும் பெற்றான். ஆகவே சிவபூஜைக்கு சமத்துவமானது எதுவுமில்லை என்று ஸ்கந்த புராணம் வலியுறுத்துகிறது. இதை அடுத்து ஏனைய புராணங்களைப் போல ஸ்கந்த புராணமும் பிரபஞ்ச உற்பத்தி பூமியின் பிரிவினை பற்றிப் பேசுகிறது. தீர்த்த வரலாறு இப்புராணத்தின் சிறப்பம்சம் ஏனைய புராணங்களில் இல்லாத முறையில் மிகப் பலவாய தீர்த்தங்கள் பற்றியும், அத்தீர்த்தங்கள் ஒட்டிய கதையினையும் மிக விரிவாகப் பேசுவனவாகும். உதாரணத்திற்குப் பின்வரும் கதையினைக் காணலாம். பஞ்சபாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட வரலாறு பாரதத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தட்சிண சாகரம் என்னும் தென் கடலை அடுத்துள்ள ஐந்து தீர்த்தங்கள் முறையே குமரேஷா, ஸ்தம்பேஷா, வர்க்கரேஷ்வரா, மஹாகாளா, சித்தேஷா