பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பதினெண் புராணங்கள் பலிக்கு அழைத்துச் செல். அவனுக்கு விலையாக ஆயிரம் பசுக்கள், ஆயிரம் பொற்காசுகள், நிறைந்த செல்வம் என்பன வற்றைக் கொடுக்க வேண்டும் என்றான். அவ்வாறே செய்து விட்டு அம்முனிவரின் நடுமகனாகிய 'சுனசேபா'வை அழைத்துக் கொண்டு அரிச்சந்திரன் மகன் மீண்டான். அப்பொழுது அசரீரி ஒன்று பின்வருமாறு பேசிற்று: 'l யாரையும் பலியிடத் தேவையில்லை. கெளதமி, கங்கைக் கரையில் சென்று வருணனுக்கு யாகம் செய்தால் எந்தப் பலியும் தேவையில்லை என்று கூறிற்று. அரிச்சந்திரன் அவ்வாறே செய்தான். ததீசியின் கதை ததீசி என்ற முனிவர் லோபா.முத்ரா என்ற தன் மனைவியுடன் கங்கைக் கரையில் ஒர் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தவப் பலன் காரணமாகத் தைத்தியர்கள், அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் அச்சம் காரணமாக அவருடைய எல்லைக்குள் நுழைய முயன்றதேயில்லை. ஒருமுறை நடந்த தேவ,அசுரப் போரில் தேவர்கள் வென்றனர். வெற்றியடைந்த அவர்கள் ததீசியிடம் வந்து ஐயனே! உனது ஆசீர்வாதத்தால் நாங்கள் அசுரர்களை வென்றோம். போர் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் தேவையில்லை. அசுரர்கள் கவர்ந்து செல்ல முடியாத ஒரிடத்தில் இவற்றைப் பாதுகாப்பாக வைக்க விரும்பினோம். அவர்கள் அண்ட முடியாத இடம் என்று நினைத்தவுடன் உன் ஆசிரமம்தான் நினைவுக்கு வந்தது. ஆகவே இவற்றை இங்கு விட்டுச் செல்கிறோம் என்று கூறிச் சென்றார்கள். ஆண்டுகள் பல சென்றன. ஆயுதங்கள் பளபளப்புக் குன்றி தங்கள் மந்திர சக்தியை இழக்கத் தொடங்கின. இந்த நிலையில் மனைவி லோபாமுத்திரை, “ஐயனே! தாங்கள் செய்தது சரியில்லை.