பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 561 இந்தக் கதையை அருச்சுனனுக்குச் சொல்லிய நாரதர் மேலும் ஒரு செய்தியைச் சொன்னார். இந்தச் சங்கமத்தில் ஸ்கந்தனால் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அதன் காரணம் என்ன தெரியுமா? தாரகாசுர வதம் முடிந்தவுடன் பெரிய சிவபக்தனாகிய அவனைக் கொன்றதற்காக ஸ்கந்தன் மிகவும் மனம் வருந்திக் கொண் டிருந்தார். அப்பொழுது விஷ்ணு அங்கே வந்து, ஸ்கந்தனைப் பார்த்து, கவலைப்படத் தேவை இல்லை. தாரகன் இறந்த இடத்தில் ஒர் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டால் போது மென்றார். ஸ்கந்தன் உடனே ஒன்று என்ன, மூன்று லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தார். தன்னுடைய கடமை முடிந்ததை உணர்த்த குமாரேஷ்வரா என்ற லிங்கத்தை ஸ்தாபிக்கிறேன் என்று மூன்று லிங்கங்களை நிறுவினார். இந்த இடத்தில் ஸ்கந்தன் வெற்றியைக் குறிக்க ஓர் உயர்ந்த தூணின் மேல் லிங்கத்தை ஸ்தாபித்தார்கள். அதற்கு ஸ்தம்பேஷ்வரா என்று பெயரிட்டனர். மஹிசாகர சங்கமக் கதை - 2 நாரதர் மஹிசாகர சங்கமத்தின் பெருமையை அருச்சுன னுக்குக் கூறிக் கொண்டு வரும்பொழுது அதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு கதை கூறினார். கலியுகத்தின் தொடக்கத்தில் விடசிங்கா என்ற மன்னன் சிங்கள தேசத்தை ஆட்சி செய்தார். அவனுக்கு ஒர் அழகிய பெண் இருந்தார். அழகிய பெண் உருவமானாலும் அவள் தலை மட்டும் ஆட்டின் தலையாக இருந்தது. அவளைப் பார்ப்பவர்கள் அனைவரும் அஞ்சி ஒடினர். ஒருநாள் அப்பெண் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்ததும் அவளது பழம்பிறப்பு நினைவுக்கு வந்தது. பழைய பிறப்பில் அவள் ஒரு பெண் வெள்ளாடாக இருந்தாள். மஹி шц.-36