பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 563 அருணாசல மகிமை ஒருமுறை சிவனின் மெய்க்காப்பாளனாக உள்ள நந்தி, மார்க்கண்டேய முனிவருக்கு அருணாசல தீர்த்தத்தின் மகிமையைச் சொல்லத் துவங்கினார். முன்னொரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் காட்டிற்குள் நுழைந்து வேட்டையாடும் பொழுது, ஒரு கஸ்தூரி மானைத் துரத்திக் கொண்டு நீண்ட தூரம் குதிரைமேல் வந்துவிட்டான். மிக்க களைப்புடன் வந்து கொண்டிருந்த மன்னன் களைப்பு மிகுதியால் திடீரென்று குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டான். அவன் விழித்துப் பார்த்தபொழுது அவன் ஏறி வந்த குதிரையும், துரத்தி வந்த மானும் திடீரென்று வித்யாதரர்களாக மாறி ஆகாயத்தில் செல்லத் தயாராக இருந்ததைப் பார்த்தான். வியப்படைந்த பாண்டியன் நீங்கள் யார் என்று கேட்க நாங்கள் வித்யாதரர்களாக இருந்தவர்கள். ஒருமுறை துர்வாச முனிவர் ஆசிரமத்தின் பக்கத்தில் சென்றோம். அவர் தவத்தைக் கலைக்கக் கருதி நான் காலால் பலமுறை பூமியை உதைத்தேன். என் நண்பன் ஆசிரமத்தைச் சுற்றி இருந்த வாசனைப் பூக்களைப் பறித்துக் கொண் டிருந்தான். தவம் கலைந்த துர்வாசர் தரையைக் காலால் தட்டிய என்னைக் குதிரையாகப் பிறக்கக் கடவாய் என்றும், வாசனைப் பூக்களைப் பறித்த என் நண்பனைக் கஸ்தூரி மானாகப் பிறப்பாய் என்றும் சபித்தார். நாங்கள் அழுது மன்னிப்புக் கேட்டவுடன் உங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுது அருணாசல மலைக்குப் பக்கத்தில் வருகிறீர்களோ அப்பொழுது மறுபடியும் வித்யாதரர்களாக மாறுவீர்கள் என்று சாபவிமோசனம் தந்தார். இப்பொழுது உங்கள் தயவால் அருணாசல மலைக்குப் பக்கத்தில் வந்துவிட்டோம். எங்கள் சாபமும் ஒழிந்தது' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டனர்.