பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 565 வேங்கடாஜல தீர்த்தம் இக்கதைகளில் வரும் தீர்த்தா என்ற சொல் தண்ணிரைக் குறிப்பதோடு யாத்திரை செய்வதற்குரிய புண்ணிய ஸ்தலங் களையும் குறிக்கும். விஷ்ணுவின் அவதாரமாகிய வராக அவதாரத்தில் வராகம் பிருத்வி எனப்படும் பூமி தேவிக்கு வேங்கடாசல தீர்த்தத்தின் பெருமையை எடுத்துக் கூறியுள்ளது. வேங்கடாசலத்தைச் சுற்றிப் பல தீர்த்தங்கள் உள்ளன. குமாரதாரா என்ற தீர்த்தத்தின் கரையில் ஸ்கந்தன் தேவ சேனாவுடன் பல காலம் வாழ்ந்தார். பாரத்வாஜ முனிவர் அர்ஜூனனிடம் வேங்கட மலையின் பெருமையைப் பின்வரும் கதையின் மூலம் எடுத்து விளக்கினார். ஒரு ராட்சசனின் மகனாகிய அஞ்சனா என்பவள் கேசரி என்ற வானரத்தை மணந்து நீண்டகாலம் மகப்பேறு இல்லாமல் இருந்தாள். எத்தனையோ விரதங்கள் இருந்தும், தீர்த்தங்களில் மூழ்கியும் அவள் எண்ணம் ஈடேறவில்லை. விஷ்ணு பக்தராகிய மதங்க முனிவர் அஞ்சனாவைப் பார்த்து நீ வேங்கடாசல மலை மீது ஏறி அங்கு உன் தவத்தை மேற் கொண்டால் உனக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும் என்றார். அதன்படியே அஞ்சனா, மலையின் உச்சியில் அமர்ந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தாள். தவத்தின் இறுதியில் வாயுதேவன் தோன்றி, உனக்கு நானே மகனாகப் பிறக்கப் போகிறேன் என்று கூறினான். அவ்வாறு பிறந்தவனே இராம பக்தனாகிய அனுமன் என்பதை யாவரும் அறிவர். 'இந்த வேங்கட மலையில்தான் ஹைஹய அரசனாகிய சங்காவிற்கு, விஷ்ணு தரிசனம் தந்தார் என்று பரத்வாஜ முனிவர் அர்ச்சுனனுக்குக் கூறினார்.