பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 567 கூடாது. நல்ல ஒரு தையல்காரனைக் கொண்டு இந்தச் சிலைகளுக்கு உடைகளைத் தைத்து அணிவிக்கவும். ஆண்டுக் கொருமுறை இந்த உடைகளை மாற்றினால் போதும் என்று கூற, இந்திரத்துய்மனும் அவ்வாறே செய்தான். வதரிகாசிரமத்தின் சிறப்பு வதரிகாசிரமத்தின் பெயர் அங்கு நிறைந்துள்ள வதரி மரங்களால் ஏற்பட்டதாகும். அம்மரங்கள் அமிர்தத்தைச் சொரிந்து கொண்டிருப்பதால் அந்த ஆசிரமம் மிக்க சிறப்புப் பெற்றிருந்தது. விஷ்ணுவைப் பொறுத்தமட்டில் சில யுகத்தில் சில தீர்த்தங்களை விட்டு அப்பால் போய்விடுகிறார் என்றாலும், வதரியை விட்டு அவர் போவதே இல்லை. சிவன் ஒருமுறை பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டி விட்டார். பிரம்மன் பிராமணன் ஆகையால் பிரம்ம ஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக்கொண்டது. என்ன முயன்றும், வெட்டிய கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் சிவன் கையை விட்டு நீங்கவில்லை. இறுதியாக விஷ்ணு அவரைப் பார்த்து, வதரி தீர்த்தம் சென்றால் இந்தக் கபாலம் கையை விட்டுக் கழன்றுவிடும் என்று கூறினார். சிவன் வதரி தீர்த்தம் வந்து, தீர்த்தத்தில் குளித்தவுடன் கபாலம் அவர் கையை விட்டு நீங்கியது. முன்னொரு காலத்தில் முனிவர்கள் எல்லாம் கூட வதரியில் தங்கி இருக்கும் பொழுது அக்னி, அவ்விடத்திற்கு வந்து தன் குறையைக் கூறினான். பார்வதியிடம் பெற்ற சாபத்தின் காரணமாக அக்னி நல்லது, கெட்டது பாராமல் எல்லாவற்றையும் எரித்துவிடும் இயல்பைப் பெற்றுவிட்டான். நல்லவர்களுக்குத் தீங்கு செய்த பாவம் அவனிடம் மிகுதியும் சேர்ந்து விட்டது. முனிவர்களைப் பார்த்த அக்னி, நான் எங்கே சென்றால் என் பாவங்களைக் கரைக்க முடியும் என்று