பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/600

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்கந்த புராணம் 57t பெரிதன்று என்றாலும், குற்றம் குற்றம்தான். எனவே நீ மனிதனாகப் பிறந்து உழன்று, வித்யாதரர்களின் மன்னனாகிய விஞ்ஞாப்திகெளடுகா உன்னைச் சந்திக்கும் பொழுது உன் சாபம் நீங்கும்” என்றார். காலவ முனிவரால் சாபம் பெற்ற வித்யாதர சகோதரர்கள் இருவரும், கோவிந்தசாமி என்ற பிராமணன் பிள்ளைகளாய்ப் பிறந்தனர். யமுனை நதிக்கரையில் கோவிந்தசாமி வசித்து வந்தார். அந்த இடத்தில் பஞ்சம் வந்ததால் அவர் குடும்பத் தோடு குடிபெயர்ந்தார். பிள்ளைகள் இருவரும் இப்போது இளைஞர்களாய் வளர்ந்துவிட்டனர். பஞ்சத்திற்கு பயந்து குடிபெயர்ந்த கோவிந்தசாமி ஒரு பாழடைந்த கோயிலில் ஒர் இரவு தங்கினர். நடு ஜாமத்தில் மூத்தவனாகிய விஜயா என்பவன் குளிர் சுரத்தால் மிகவும் அவதிப்பட்டு, குளிர் காய்வதற்கு எங்கிருந்தாவது நெருப்புக் கொண்டு வருமாறு தன் தகப்பனைக் கேட்டான். தந்தை கோவிந்தசாமி நடு இரவாக உள்ள இந்நேரத்தில் யார் வீட்டிலும் போய் நெருப்புக் கேட்க முடியாது. காலையில் பார்த்துக் கொள்ளலாம்' என்றான். விஜயன், "தந்தை! பொய் சொல்ல வேண்டாம். அதோ துரத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதில் சென்று குளிர் காயலாம்” என்றான். இதைக் கேட்ட தந்தை "மகனே! அது சுடுகாடு. அங்கே ஒரு பிணம் எரிந்து கொண்டிருக்கிறது. பிணத்தைச் சுடும் நெருப்பில் குளிர்காய்தல் செய்யக் கூடாது என்றான். மகன் பிடிவாதமாக அங்கே போகப் போகிறேன் என்று சொல்ல, பிள்ளைப் பாசத்தால் உந்தப்பட்ட கோவிந்தசாமி தானும் உடன் சென்றான். எரிந்து கொண்டிருந்த பிணத்தின் பக்கத்தில் வந்தவுடன், நெருப்பினுள் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தைக் காட்டி, 'பளபளவென் றிருக்கும் அது என்ன? என்று விஜயன் கேட்டான். அது மண்டை ஒடு' என்று தந்தை சொன்னவுடன், விஜயன் ஒரு