பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/601

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


572 பதினெண் புராணங்கள் கல்லை எடுத்து மண்டை ஒட்டை உடைத்தான். உள்ளே இருந்து இரத்தமும், நிணமும் விஜயன் முகத்தில் தெறித்தன. அதைத் துடைப்பது போல நக்கி, ருசித்துச் சாப்பிட்டான் விஜயன். உடனே, ஒரு வேதாளமாக மாறிவிட்டான். சதை, இரத்தம் இரண்டையும் சுவைத்துச் சாப்பிட்டவன் தந்தையின் கழுத்தையே நெறிக்கத் தொடங்கினான். உடனே செய்த பாவம் போதும், தகப்பனைக் கொன்று மேலும் பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாதே’ என்ற குரல் கேட்டது. விஜயன் தந்தையை விட்டுவிட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வேதாளங்களோடு ஒன்றாகச் சேர்ந்து விட்டான். மண்டை ஒட்டை ருசித்ததால், வேதாளமாக மாறிவிட்ட விஜயனுக்கு கபாலஸ்வேதனா' என்ற பெயர் நிலைத்தது. இப்பெயரின் பொருள் ‘மண்டையை உடைத்தவன்’ என்பதாகும். கோவிந்தசாமி, அவன் மனைவி, இரண்டாவது மகன் அசோகன் ஆகிய மூவரும் வேதாளமாக மாறிவிட்ட விஜயனை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, அவ்வழியே வந்த வணிகன் இவர்களை அழைத்துச் சென்று, சிலநாட்கள் தன் பாதுகாப்பில் இருக்குமாறு செய்தான். இளையவனான அசோகன் சிறந்த கல்விமானாகவும், மந்திரங்கள் கற்றவ னாகவும், வலிமையான உடம்பைப் பெற்றவனாகவும் இருந்தமையால் இவன் புகழ் எங்கும் பரவிற்று. அப்போது காசியை ஆண்டு கொண்டிருந்த பிரதாபமுக்தா என்பவன் அசோகன் அறிவை மெச்சித் தன் அரசவையில் அவனுக்குப் பதவி கொடுத்தான். ஒருநாள் அரசனும், அசோகனும் குதிரைமேல் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு சுடுகாட்டின் பக்கம் வந்தனர். அங்கே நடப்பட்டிருந்த கழுமரத்தில் ஒருவனை ஏற்றி இருந்தனர். உயிர் பிரியாத அவன், நான்கு நாட்களாக இக் கழுமரத்தில் தொங்குகிறேன். வறட்சியால் நா உலர்ந்துள்ளது.