பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 575 சகோதரனையும் வித்யாதரனாக மாற்றிப் பிறகு இருவரும் வருவோம்’ என்றான். உடனே வித்யாதர மன்னன், நீங்கள் இருவரும் ராமேஸ்வரம் சென்று, சக்கர தீர்த்தம் பக்கத்தில் குளித்தால் உன் சகோதரனின் சாபம் நீங்கி, அவனும் வித்யா தரன் ஆவான்’ என்று கூறினான். அசோகன் வேதாளத்தை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் சென்றான். சக்கர தீர்த்தத்தின் திவலைகள் வேதாளத்தின் மேலே பட்டவுடன் அவன் பழைய விஜயனாக மாறி, தேவலோகம் சென்றனர். தர்மாரண்யத்தின் கதை வேதவியாசர் பாண்டவர்களில் மூத்தவனாகிய யுதிஷ்டிர னுக்குப் பின்வரும் கதையைச் சொன்னார். தர்மாரண்யம் என்ற காட்டுப் பகுதி மிகச் சிறந்த இடமாகும். நிறைந்த மரங்களும், பல நிறமுடைய பூக்களும் அங்கு நிறைந்துள்ளன. அந்தக் காட்டின் இருண்ட பகுதியில் எமன் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான். காலம் செல்லச் செல்ல அவன் உடம்பு அசைவே இல்லாமல் மரம் போல் ஆகிவிட்டது. அதன் காரணமாக அவன் உடம்பில் கரை யான்கள் புற்று வைத்துவிட்டன. உடம்பில் பல இடங்களில் எலும்பே வெளியே தெரியத் தொடங்கியது. இந்தக் கடுந் தவத்தைக் கண்ட இந்திரன் மிகவும் பயந்து விட்டான். எமன் இந்திரப் பதவியை அடைய வேண்டித்தான் இவ்வளவு கடுந்தவம் செய்கிறான் என்ற முடிவிற்கு வந்து விட்டான். அவன் தவம் முடிந்தால் எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிய இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்தான். இந்திர சபையில் நடனமாடும் அப்சரஸ்களில் வர்த்தனி என்ற பெண்ணை அழைத்து “நீ போய் நாட்டியமாடி எப்படியாவது எமனுடைய தவத்தைக் கலைத்துவிடு” என்று கட்டளையிட்டான். அந்த அப்சரஸ் மனிதப் பெண் வடிவு