பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 பதினெண் புராணங்கள் முழுவதற்கும் நான்தான் தலைவன். எல்லா இடங்களிலும் இருப்பவன் நான்தான். இவர்களைக் காப்பவன் நான்தான். ஆகவே நான்தான் பெரியவன் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை’ என்றார். இருவரும் நீதான் அகங்காரம் உடையவன் என்று ஒருவரையொருவர் ஏசிப் பேசும்போதே சண்டை முற்றி விட்டது. விஷ்ணு, பிரம்மனைப் பார்த்து, நீ அறியாமை நிரம்பியவன். உன்னுடைய ஆணவமும், பொறாமையும் உன் கண்களை மறைக்கின்றன என்றார். அது கேட்ட பிரம்மன் என்னுடைய சபையில் வந்து இருந்து கொண்டு என்னை அவமானப்படுத்திப் பேசும் வாயோடு கூடிய தலை கீழே உருளப் போகிறது என்றார். இந்தச் சாபம் சாரணமாக வில் அடித்து விஷ்ணுவின் தலையைக் கீழே தள்ளிவிட்டது. தலையில்லாத விஷ்ணுவைப் பார்த்த தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன் விஸ்வகர்மாவை அழைத்து, 'விஷ்ணுவுக்குப் பொருத்தமான ஒரு தலையினைச் செய்து சேர்த்து விடு. அதற்குப் பதிலாக யாகங்களில் உனக்கும் பலிதரச் செய்கிறேன்' என்றான். விஸ்வகர்மா எவ்வளவு முயன்றும் தலையைச் செய்ய முடியவில்லை. கீழே விழுந்த தலையை எல்லோரும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தன் ரதத்தில் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தான். இந்திரன் ஏவலால், சூரியன் குதிரைகளில் ஒன்றின் தலையை வெட்டி, விஷ்ணுவின் உடம்பில் பொருத்தி விட்டான் விஸ்வகர்மா. அதனால் விஷ்ணுவுக்கு ஹயக்கிரீவன் என்ற பெயரும் வந்தது. குதிரைத் தலையுடன் இருக்க விரும்பாத விஷ்ணு, தர்மாரண்யம் சென்று தவம் செய்ய முற்பட்டார். விஷ்ணுவின் சாபத்தால் பிரம்மனுடைய முகம் மிகக் குரூரமாகி விட்டது. அதைப் போக்கிக் கொள்ள தர்மாரண்யம் வந்து, தவத்தை