பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பதினெண் புராணங்கள் செய்தான். சிவபிரான் தோன்றியவுடன் "தேவர்களை அழிக்க வேண்டும்” என்று வரம் கேட்டான். அதுகேட்ட சிவன், "என் நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண் எப்பொழுது உனக்குத் தெரிகிறதோ அப்பொழுது உன் விருப்பம் நிறைவேறும்” என்று சொல்லி மறைந்தார். பல ஆண்டுகள் தவம் செய்து சிவபிரானுடைய நெற்றிக்கண்ணைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றான் பிப்பலா. அந்த நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கொடிய பூதம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட பூதம் "உன்னுடைய விருப்பம் என்ன?’ என்று கேட்க, பிப்பலா, “தேவர்களை அழித்து விடுக!” என்று கூறினான். உடனே பூதம் அவனுடன் போர் செய்யத் துவங்கியது. “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று பிப்பலா கேட்க, ‘தேவர்களை அழிக்க வேண்டும் என்றுதானே நீ சொன்னாய். ததீசியின் பிள்ளை யாகிய நீயும் ஒரு தேவன்தானே! ஆகவேதான் அழிக்கும் வேலையை உன்னிடத்திலிருந்தே தொடங்குகிறேன்” என்று கூறிற்று. அஞ்சி ஒடிய பிப்பலா சிவபிரானைச் சரணடைந் தான். அப்பெருமான், “எது நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது. தேவர்களை அழிப்பதால் உனக்கு எவ்வித லாபமும் இல்லை. இப்பொழுது நீ உன் தாய் தந்தையரை தரிசிக்கலாம்" என்று கூறியவுடன் விமானத்தில் ததீசியும், லோபாமுத்திரையும் வந்தனர். பிப்பலா அவர்களை வணங்கினான். 'மணஞ் செய்து கொண்டு சுகமாக வாழ்வாயாக!” என்று அவர்கள் அவனை ஆசீர்வதித்துவிட்டுப் போயினர். நாகேஸ்வரனின் கதை பிரதிஷ்டனா என்ற நகரை “சுரசேனா என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். நீண்ட காலம் அவனுக்கு மகப்பேறு இல்லை. பல தவங்கள் செய்து இறுதியாக ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் என்ன துரதிஷ்டம்! அக்குழந்தை மனித