பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/610

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்கந்த புராணம் 58? ஸ்காந்தத்தில் உள்ள காசி மண்டபம் என்பது பதினைந்து ஆயிரம் பாடல்களை உடைய சிறந்த பகுதியாகும். காசியின் பெருமையும் அங்குள்ள பல சிவன் கோயில்கள் பற்றி இப் பகுதியில் கூறப்பெற்றுள்ளன. சிவனே காசியின் பெருமையைப் பற்றி ஸ்கந்தனிடம் கூறுவதாகக் காசிக் காண்டம் பேசுகிறது. காசியைப் போன்ற ஒரு க்ஷேத்திரம் மூன்று உலகிலும் இல்லை. காசியில் பிறந்தவர்கள் பிறப்பு, இறப்பு என்னும் பந்தங்களிலிருந்து உடனே விடுதலை அடைகின்றனர். அதனால்தான் தேவர்கள் கூட சாகும்போது காசியில் வந்து இறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் மற்ற சாதாரண உயிர்கள் பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. காசியில் உள்ள மிகமிகப் புண்ணியமான இடங்களைப் பற்றிக் கூறவேண்டுமானால் மணிகர்ணிகா, ஞானவாபி, விஷ்ணுடடோடகா ஆகியவற்றோடு பஞ்சனஹர்தா என்பவை முக்கியமாகும். இந்தத் தீர்த்தங்களில் குளிப்பவர்கள் மறுபிறப்பை அடைவதில்லை. காசியில் உள்ள விஸ்வேஸ் வரரை வழிபடுபவர்கள் பிறப்பு இறப்புகளில் இருந்து விடுபடுவார்கள். முனிவர்கள் பலரும் அடிக்கடி காசிக்கு வருவதுண்டு. சுதா முனிவர் ஒருமுறை காசிக்கு வந்தபொழுது மற்ற முனிவர்களுக்குச் சிவபுராணத்தின் (வாயு புராணம்) சில பகுதிகளை எடுத்துக் கூறினார். சிவனே பார்வதியிடம் தனக்கு மிகவும் பிடித்த இடம், காசி என்று அழைக்கப்படும் வாரணாசிதான் என்றும், எப்போதும் அங்கேயே தான் தங்கியிருப்பதாகவும் கூறினார். சிவன் எப்போதும் காசியை விரும்பித் தங்குவதற்குக் காரணம் என்ன? என்று கேட்கத் தன் கையில் ஒட்டிக்