பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 பதினெண் புராணங்கள் என்னுடைய மற்றப் பெண்களெல்லாம் அவர்களுடைய கணவன்மார் போட்ட நகைகளைச் சுமக்க முடியாமல் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். காலம் முழுவதும் உங்கள் இருவரையும் இங்கே வைத்துக் கொண்டு பராமரிக்க என்னால் முடியாது. ஆனாலும் இதைப் போய் உன் கணவனிடம் சொல்லிவிடாதே. வேடிக்கைக்குத்தான் இதை நான் சொன்னேன்” என்று கூறி முடித்தாள். பார்வதி கணவனிடம் சென்று தன் தாயார் கூறியதாகச் சொல்லாமல் தானே சொல்லுவது போல இவை அனைத்தையும் மிகவும் அன்போடு ஆனால் கடுமையாகவும் கூறிவிட்டாள். பார்வதியின் சொற்களைக் கேட்ட சிவன் உடனே பார்வதியை அழைத்துக் கொண்டு தன் காளை வாகனத்தில் ஏறி காசிக்கு வந்து சேர்ந்தார். சிவனுடைய உத்தரவினால் விஸ்வகர்மா முன்னரே காசி நகரத்தை அமைத்திருந்தார். வான் உயர்ந்த கட்டடங்கள், பெரிய பெரிய பூஞ்சோலைகள் இவற்றைக் கொண்டு காசி விளங்கிற்று. காசி தங்கத்தால் ஆகிய சுவர்களையும், நவரத்தின மணி முதலியவை பதித்த பகுதிகளையும் கொண்டு விளங்கிற்று. சிவனும் பார்வதியும் பலகாலம் காசியில் தங்கினர். பார்வதி தன் பிறந்த இடத்தை மறந்தே விட்டாள். பலகாலம் கழித்து சிவன் கைலைக்கு மீண்டார். காசியை விட்டுப் புறப்படுமுன் ஒரு கோடி லிங்கங் களைக் காசியில் பல இடங்களில் நிர்மாணித்து விட்டு, கைலைக்கு வந்தார். இது நடந்தது துவாபர யுகத்தில். அதன் பின்னர் பல அரசர்கள் காசியில் இருந்து ஆட்சி செய்தனர். அவர்களில் ஒரு மன்னன் காலத்தில் காசி நகரம் முழுவதும் தீயால் அழிந்தது. அவன் நீண்ட காலம் தவம் செய்து சிவன் எதிர்ப்பட்டபொழுது கிருஷ்ணனைத் தோற்கடிக்கும் சக்தி தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டான். சிவன் அப்படியே தருவதாகச் சொல்லி, போரில் தானும் உதவுவதாக