பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 589 எதுவுமில்லை. எங்கும் இருள். பூமியைத் தண்ணீர் மூடி இருந்தது. அத்தண்ணீரில் விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். ஒருவாறாக யுக முடிவில் விஷ்ணு கண் விழித்தார். பொழுது விடிந்ததைப் பாராட்ட தட்சன் ஒரு யாகம் செய்தான். சிவனைத் தவிர ஏனைய தேவர்கள் அனைவரையும் தட்சன் அழைத்திருந்தார். 'சிவனை ஏன் அழைக்கவில்லை? என்று நாரதர் கேட்க, அவர் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அழைக்கவில்லை என்று புலஸ்தியர் கூறினார். பிரம்மன் மண்டை ஓடு எப்படி சிவனிடம் வந்தது என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூறத் தொடங்கினார். பிரபஞ்ச உற்பத்திக்காக விஷ்ணு ஒருமுறை பிரம்மனைத் தோற்றுவித்தார். அவர் நான்கு வேதங்கள் கற்றவராகவும், ஐந்து தலை உடையவராகவும் இருந்தார். திடீரென்று அவர் எதிரே காளை வாகனத்தின் மேல் பார்வதியுடன் சிவன் வந்து தோன்றினார். சிவன் பிரம்மனைப் பார்த்து, நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டவுடன், பிரம்மன் படுகோபம் கொண்டு, சிவனைப் பார்த்து, “மூன்று கண்களை உடைய உன்னை எனக்குத் தெரியும். நீ இருட்டில் வாழ்பவன். நான் யார் என்று தெரியவில்லையா? நான்தான் பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்மன். இவ்வாறு பிரம்மன் கூறியதும், கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்டார். ஆனால் கிள்ளப்பட்ட தலை சிவன் கையில் ஒட்டிக் கொண்டு கீழே விழ மறுத்தது. கோபம் கொண்ட பிரம்மன் நான்கு கைகளை உடைய ஒரு வீரனை உற்பத்தி செய்து சிவனைக் கொல்லுமாறு பணித்தார். சிவனும் பார்வதியும் விஷ்ணுவிடம் ஒடினர். சிவன் நடந்தவற்றைக் கூற விஷ்ணு, தன் இடக்கையை உயர்த்தி திரிசூலத்தால் அக்கையில் குத்துமாறு கூறினார். சிவன்