பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 33. உருவுடன் இல்லாமல் ஒரு பாம்பாக அமைந்துவிட்டது. அரசனும் அரசியும் யாருக்கும் சொல்லாமல் அக்குழந்தையை வளர்த்தார்கள். திருமணப் பருவம் வந்தவுடன் அப்பாம்புப் பிள்ளை, “உடனே எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்றது. பெற்றோர் என்ன செய்ய முடியும்? அமைச்சனிடம் நடந்தவற்றை அரசன் கூறினான். வயது முதிர்ந்த அமைச்ச னொருவன் அதற்கொரு வழியைக் கண்டான். “கீழ்த்திசையை ஆட்சி செய்யும் விஜயன் என்ற மன்னனுக்கு போகவதி என்ற அழகான பெண் இருக்கிறாள். அவளை மணமுடித்து வைக்கிறேன்.” என்று கூறிவிட்டுப் பிறகு அக்கிழ அமைச்சர் விஜயனிடம் சென்று பெண் பேசினார். அவன் ஒத்துக் கொண்ட பொழுது ராஜபுத்திர முறையில் மணமகன் வராமல் அவனுடைய வாளுக்கு மாலையிட்டாள் போகவதி. திருமணம் முடிந்த பிறகு புகுந்த வீட்டிற்கு வந்தாள் போகவதி. மணப் பெண்ணைத் தனியாக அழைத்து, "இந்த வீட்டில் ஒரு தேவன் பாம்பு வடிவத்துடன் இருக்கிறான். அவனுக்குத்தான் நீ மாலை யிட்டாய்” என்று ஒரு தாதி கூறினாள். தேவன் என்று கூறிய வுடன் மணமகள் மகிழ்ச்சி அடைந்து பாம்புக் கணவனைப் பார்க்கச் சென்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். முற்பிறவியில் இருவரும் கைலாயத்தில் சிவனின் ஆபரணமாக இருந்தனர். இருவரும் இப்பொழுது கங்கையில் சென்று குளித்தனர். மூழ்கி எழுந்தவுடன் பாம்புக் கணவன் அழகான மனித தேகத்தைப் பெற்றுவிட்டான். நீண்ட காலம் ஆட்சி செய்த பிறகு இருவரும் கைலை சென்றடைந்தனர். நான்முகன் கதை முன்னொரு காலத்தில் தேவாசுரப் போர் மிகக் கடுமையாக நடந்தது. இப்போரில் தேவர்கள் தோற்றனர். ப.பு.-3