பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 595 கொண்டே மதனனைத் தன் பக்கத்தில் வருமாறு கூறினார். அவன் வந்து அமர்ந்தவுடன், அவனிடம் பேசிக் கொண்டே, ஒரு கொத்துப் பூவை எடுத்துத் தன் தொடையில் வைத்து திரித்தார். திரிக்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து ரம்பையைத் தோற்றோடச் செய்யும் அழகே வடிவான ஒரு பெண் உருவானாள். மதனனைப் பார்த்து, 'ஊர்வசி என்ற இந்தப் பெண்ணுக்கு நிகராக உங்கள் தேவலோகத்தில் எந்த அப்ஸரஸும் இல்லை. இந்திரனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இந்தப் பெண்ணை அழைத்துச் செல் என்றார். பிரம்மன் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை, கேவலம் பூங்கொத்துக் களில் இருந்தே நாராயண முனிவர் செய்ததைக் கண்ட காமன் பயந்து ஒடிச் சென்று நடந்தவற்றை விவரமாகக் கூறினான். இந்த விவரம் அறிந்த இந்திரன் அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்புவதையே விட்டு விட்டான். பிரகலாதன் கதை ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் மகனாகிய பிரகலாதனுக்கு முடி சூட்டினார் விஷ்ணு. அவன் ஆட்சி செய்யும் காலத்தில், சாயாவனர் என்ற முனிவர், நகுலேஷ்வா தீர்த்தத்தில் நீராடப் போனார். அப்பொழுது ஒரு கரிய பாம்பு அவரைக் கடித்தது என்றாலும் அவர் விஷ்ணுவைத் தொழுது விஷத்திலிருந்து விடுபட்டார் என்றாலும் அந்தப் பாம்பு அவரைச் சுற்றி இழுத்துச் சென்று அரக்கர் லோகத்தில் ஆண்டுகொண்டிருந்த பிரகலாதன் முன் நிறுத்தியது. பிரகலாதன் அவரை வணங்கி "முனிவரே! மூன்றுலகிலும் தலைசிறந்து விளங்கும் தீர்த்தங்களில் நீராட விரும்புகிறேன்.” என்றான். அதற்கு முனிவர் “அரசே! மேலுலகத்தில் புஷ்கர தீர்த்தமும், பூலோகத்தில் நைமிச தீர்த்தமும், கீழ்லோகத்தில் சக்கர தீர்த்தமும் தலைமையானவையாகும்” என்று கூறிப் போனார்.