பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60{} பதினெண் புரானங்கள் சிலகாலம் கழித்து ரம்பன் குபேரன் வாழும் இடத்திற்குச் சென்றான். யக்ஷினிகள் வாழும் உலகில் ஒர் அழகான பெண் எருமையைப் பார்த்து அதன் மேல் மோகம் கொண்டு அந்த எருமையை மணம் செய்து கொண்டான். எருமை மனைவியை அழைத்துக் கொண்டு அசுரர் உலகத்திற்கு வந்தபோது அங்கு அந்த எருமை மனைவியை யாரும் மதிக்கவில்லை. அதனால் வருத்தம் அடைந்த ரம்பன் எருமை மனைவியை அழைத்துக் கொண்டு யகதினி உலகத்திற்கே சென்றுவிட்டான். அங்கே அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மகிஷாசுரன் என்று பெயரிட்டனர். சிலகாலம் கழித்து மகிஷாசுரனின் தாய் எருமை மற்றொரு எருமையுடன் சண்டை செய்ய நேரிட்டது. தன்னுடைய மனைவியைக் காப்பாற்றச் சென்ற ரம்பன் மற்றொரு எருமையால் குத்திக் கொல்லப்பட்டான். இறந்து போன ரம்பனுடைய உடம்பு எரிகின்ற சிதையின் மேல் அவனுடைய மனைவியாகிய பெண் எருமையும் விழுந்து இறந்தது. அந்தச் சிதை நெருப்பில் இருந்து மிகக் கொடுமையான இரக்கவிஜா என்ற ஒர் அசுரன் தோன்றினான். அவன் சுற்றி இருந்த யகூஷினிகள், எருமைகள் ஆகியவர்கள் அனைவரையும் கொன்று விட்டான். அவனுடைய பாதுகாவலில் வளர்ந்த மகிஷாசுரன் பெருவீரனாக மாறி தேவலோகத்தில் இந்திரன் முதலியவர்களை விரட்டினான். அவனை எதிர்க்க முடியாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. நாம் எல்லோரும் சென்று விஷ்ணுவிடம் முறை யிடுவோம் என்று கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு விஷ்ணுவிடம் சென்றனர். அங்கு சிவனும் இருந்தார். இதைக் கேட்ட விஷ்ணுவும், சிவனும் பெருங்கோபம் கொண்டனர். சிவனுடைய கோபத்திலிருந்தும், விஷ்ணு, பிரம்மன் முதலிய