பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 601 வர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல் களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவைக் கொண்டது. சிவனுடைய ஆற்றல் அவள் முகமாகவும், அக்கினியின் ஆற்றல் அவள் கண்களாகவும், எமனின் ஆற்றல் அவள் தலைமுடியாகவும், விஷ்ணுவின் ஆற்றல் கைகளாகவும், இந்திரன் ஆற்றல் இடையாகவும், வருணன் ஆற்றல் கால்களாகவும், பிரம்மன் ஆற்றல் பாதங் களாகவும், சூரியன் ஆற்றல் கட்டைவிரலாகவும், யட்சர்கள் மூக்கையும் சத்தியர்கள் கண், புருவங்களையும், மருத்துகள் காதுகளையும் கொடுத்தனர். தேவர்கள் காத்யாயனிக்குப் பலவித ஆயுதங்கள் கொடுத்தனர். சிவன் திரிசூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்கினி சக்தியை யும், வாயு வில்லையும், சூரியன் அம்பராது.ாணியையும், அம்பு களையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், எமன் கதையையும், குபேரன் கதாயுதத்தையும், விஸ்வகர்மா கோடாரியையும் கொடுத்தனர். மற்ற தேவர்கள் அவளுக்கு ஆபரணத்தைக் கொடுத்தனர். இமயமலை ஒரு சிங்கத்தைக் கொடுத்தது. இவ்வாறு தரப்பட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காத்யாயனி விந்தியமலைக்குச் சென்றாள். விந்தியமலையில் நிகழ்ந்தவை விந்தியமலை சென்ற காத்யாயனி அதையே தன் இருப்பிடமாகக் கொண்டாள். அந்த மலையில் மகிஷாசுரன் தூதர்கள் சண்டா, முண்டா என்ற இருவர், காத்யாயனியைப் பார்த்தவுடன் அவள் அழகில் ஈடுபட்டு தங்கள் அரசனுக்கு ஏற்ற மனைவி என்று முடிவு செய்து அரசனிடம் கூறினர்.