பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 பதினெண் புராணங்கள் தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஒடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழு தெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், “நீங்கள் சிவபிரானிடம் சென்று முறை யிட்டால் அவர் ஒருவரால்தான் அசுரர்களை அழிக்க முடியும். ஆகவே செல்லுங்கள்” என்று ஆணையிட்டான். தேவர்கள் சிவனிடம் முறையிட அவர்கள்பால் இரக்கம் கொண்ட சிவன் தான் ஒற்றையாக நின்று அசுரர்களுடன் போர் தொடுத்தார். அசுரர் படை சின்னாபின்னமாகியது. தேவர் உலகத்தைக் கடந்து, பூமிக்கு ஒடி, அங்கும் துரத்தப்பட்ட காரணத்தால் கீழ் உலகம் சென்றனர். சிவபிரான் தான் ஒருவராக நின்று போர் தொடுத்தமையின், அவர் உடம்பிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்பட்டுத் தரையில் சிந்தின. அந்தத் துளிகள் ஒவ்வொன் றிலிருந்தும் மாத்ரிகள் எனப்படும் சிவ கணங்கள் தோன்றின. இப்பொழுது இந்த மாத்ரிகளும் அசுரர்களை விரட்டியடித்தன. ஒருவாறு அசுரர்கள் ஒடி மறைகின்ற நிலையில் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. கங்கைக் கரையில் ஏனைய தேவர்களோடு தங்கியிருந்த பிரம்மாவின் கழுதை வடிவுடைய ஐந்தாவது தலை அசுரர்களைக் கூவி அழைத்தது. நீங்கள் ஏன் அஞ்சி ஒடுகிறீர்கள்? மீண்டும் வந்து சண்டையைத் துவக்கி னால் உங்களுக்கு உதவியாக நான் இருக்கிறேன்' என்று அவர்களைக் கூவி அழைத்தது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவர்கள் பிரம்மன் தங்களுக்குத் துணையாக இருக்க, அவர் ஐந்தாவது தலை தங்கள் விரோதிகளாகிய அசுரர்களுக்குத் துணை போகிறேன் என்று கூறியது பெரும் கலக்கத்தை விளைவித்தது. செய்வதறியாது தேவர்கள் ஒடிச்சென்று விஷ்ணுவிடம் முறையிட்டனர். அதைக்கேட்ட விஷ்ணு, "பிரம்மனுடைய ஐந்தாவது தலையை நான் கிள்ளிவிட