பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/634

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


606 பதினெண் புராணங்கள் என்று விஷ்ணு கூறினார். இதே குருக்ஷேத்திரத்தில்தான் லோமஹர்ஷன முனிவர் மற்ற முனிவர்களுக்கு வாமன புராணத்தைச் சொன்னார். வாமன புராணக் கதை வருமாறு: வலியின் கதை (மகாபலி) பிரஹலாதனின் மகன் விரோச்சனுக்கு வலி மகனாகப் பிறந்தான். நேர்மையும் சத்தியமும் உடைய அவன் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான். இந்திரன் மட்டும் தன் பதவி பறி போனதால், மிகவும் வருத்தத்துடன் இருந்தான். தேவர்களை அழைத்துக் கொண்டு தேவர்களின் தாய்தந்தை யாகிய அதிதி, காசியபன் ஆகிய இருவரையும் சந்தித்தான். அவர்கள் இருவரும் நேர்மையுடன் நடக்கும் தைத்தியனாகிய வலியை ஒன்றும் செய்ய முடியாது. தேவையானால் பிரம்மாவைச் சென்று பாருங்கள் என்று கூறினார்கள். பிரம்மனிடம் சென்ற பொழுது "வலியை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வடகடலின் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானியுங்கள்” என்று கூறினர். இப்பொழுது இந்திரன் முதலிய தேவர்களுடன் அதிதி, காசிபன் ஆகிய இருவரும் உடன் சேர்ந்துகொண்டு விஷ்ணு தியானத்தில் இடம்பெற்றனர். விஷ்ணு அவர்கள் எதிரே வந்து, நான் காசிபனுக்கும், அதிதிக்கும் பிள்ளையாகப் பிறக்கப் போகிறேன். உங்கள் துயர் தீரும் என்று கூறி மறைந்தார். அதே நேரத்தில் வலியின் நாட்டில் தீய சகுனங்கள் பல தோன்றின. வலி அதன் காரணம் யாது என்று தனது பாட்டனாகிய பிரகலாதனைக் கேட்டான். பிரகலாதன், அதிதியின் வயிற்றில் விஷ்ணு பிறக்கப் போகிறார். அதனால்தான் தைத்தியர்களிடையே இந்தத் தீய சகுனங்கள் ஏற்படுகின்றன என்று கூறினார். அதைக் கேட்ட வலி “அந்த விஷ்ணு என்பவன் யார்? என்னை விட அதிக பலம் பொருந்தியவனா?” என்று விஷ்ணுவை