பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 609 அவளை அழைத்து வர நெருங்கினர். அவளிடம் இருந்து வெளிப்பட்ட சக்தி தேவர்களை நெருங்க விடவில்லை. அதை வந்து பிரம்மனிடம் கூற அவளே தகுதியானவள் என்று பிரம்மன் கூறினார். (உமா அல்லது காளி என்ற இந்தப் பெண் சிவனை மணந்த கதை முன் புராணங்களில் கூறப் பட்டுள்ளது.) விநாயகர் தோற்றம் சிவனும், உமாவும் மந்தர மலையில் விஸ்வகர்மா அமைத்துத் தந்த மாளிகையில், அமைதியாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் சிவன், உமையின் மற்றொரு பெயராகிய காளி என்று கூறி அழைத்துவிட்டார். தான் கறுப்பாக இருப்பதால் தான் இப்படி அழைத்தார் என்று நினைத்து, உமாதேவி தவம் செய்யப் போனார். பிரம்மன் வெளிப்பட்டவுடன் தன்னுடைய நிறத்தை மாற்றும்படிக் கூறினார். பிரம்மன் அவ்வாறே செய்து, அவளிடம் இருந்து எடுக்கப்பட்ட கருமை நிறத்தை காத்யாயனி என்ற பெண்ணாகப் படைத்தார். உடைக்குச் சிவப்பு நிறம் வந்ததும் அவள் கெளரி என்ற பெயர் பெற்றாள். சிவனும், கெளரியும் ஒர் ஆண் மகவு தோற்றுவித்தால், தன் இந்திரப் பதவிக்கு ஆபத்து என்றுணர்ந்த இந்திரன், சிவன் குழந்தை பெறாமல் இருக்கப் பார்த்துக் கொண்டார். அங்கு இருந்த கெளரி, இந்திரன் மேல் கோபம் கொண்டு, சிவனுடைய உதவி இல்லாமல் தானே ஒரு ஆண் மகவை உண்டாக்கினார். அக்குழந்தையைக் கண்ட சிவன் பெரிதும் மகிழ்ந்து, நாயகனாகிய தன் உதவி இல்லாமல் பிறந்த குழந்தை ஆதலால், விநாயகன் என்று பெயரிட்டார். சிவகணங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருந்தமையால் கணேசன் என்றும், கணபதி என்றும் அழைக்கப்பட்டார். шлц.–39