பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/638

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


610 பதினெண் புராணங்கள் கம்ப - நிசும்பர்கள் காசிட முனிவர், தனு என்ற தைத்தியப் பெண்ணை மணந்து சும்ப, நிசும்பர் என்ற மக்களைப் பெற்றனர். இவர்களைக் காளி அழித்த கதை ஏற்கெனவே மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது) முராரியின் கதை விஷ்ணுவுக்கு முராரி என்ற பெயருண்டு என்று புலஸ்தியர் சொல்ல, அவருக்கு முராரி என்று பெயர் வரக் காரணம் என்ன என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூற ஆரம்பித்தார். காசியப முனிவனுக்கு, தைத்திய குலத்தைச் சேர்ந்த முரா என்றொரு மகன் இருந்தான். மூன்று உலகங்களையும் வெல்ல எண்ணிய அவன் கடுமையான தவம் புரிந்து பிரம்மனிடம் புதுமையான வரம் ஒன்றினைப் பெற்றான். அதன்படி “போர்க்களத்தில் யாரேனும் ஒருவர் மேல் நான் என் கையை வைத்தால் அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும்” என்றான். பிரம்மனும் அவ்வரத்தை அளித்தார். முரா இவ்வரத்தைப் பெற்றவுடன் அவனை வெல்ல முடியாது என்று அறிந்த இந்திரன், இந்திராணி, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காளிந்தி நதிக் கரையோரம் ஒரு நகரத்தை நிர்மாணித்து அதில் சென்று வாழ்ந்தான். ரகு அரசன் ஒரு யாகம் செய்து கொண்டிருந்தான். முரா அவனிடம் வலுச் சண்டைக்குப் போனான். வசிட்டர் அவனிடம், "உனக்கு இணையான வலிமை கொண்டுள்ளவரிடமே நீ போரிட வேண்டும் என்று கூறி யமனிடம் அனுப்பினார். முராவின் வலிமை பற்றி அறிந்த யமன் தன் வாகனத்தில் ஏறி விஷ்ணுவிடம் சரணடைந்தான். விஷ்ணு அவனைச் சமாதானப்படுத்தி, அந்த அசுரனைத் தன்னிடம் அனுப்பும்படிக்