பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 35 முடியும். அதிலும் ஒர் ஆபத்து இருக்கிறது. கிள்ளப்பட்ட தலை கீழே விழுந்தால் பூமி சுக்கு நூறாகிவிடும். அதனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சிவனிடம் சென்று முறையிடுங்கள்” என்று கூறினார். தேவர்கள் சிவ பிரானிடம் சென்று முறையிட்டு அத் தலை கீழே விழுந்தால் பூமிக்கு நேரக்கூடிய விபத்தையும் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட சிவபெருமான் சற்று யோசித்துவிட்டு, “கவலை வேண்டாம். நானே அந்தத் தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஒட்டை என் கையிலேயே வைத்துக் கொள்கிறேன்” என்று கூறினார். தாம் கூறியபடியே பிரம்மனுடைய ஐந்தாவது தலை (கழுதைத் தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஒட்டைச் சிவபிரான் கையிலேயே வைத்துக் கொண்டார். அன்றிலிருந்து பிரம்மா சதுர்முகன்’ (நான்முகன்) என்று அழைக்கப்பட்டார். பிரம்மாவின் தலை கிள்ளப்பட்ட இடம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்பட்டது. சிவபிரானின் வியர்வை யில் கிளம்பிய மாத்ரிகள் அசுரர்களைக் கொன்ற இடம் மாத்ரி தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது. பில்ல தீர்த்தம் முன்னொரு காலத்தில் வேதா என்றொரு முனிவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். நாள்தோறும் காலையில் இருந்து மாலைவரை சிவனைப் பிரார்த்தித்து விட்டுப் பிறகு ஊருக்குள் சென்று பிச்சை எடுப்பார். கிடைத்த உணவைப் பக்கத்தில் உள்ள காட்டில் இருந்த சிவலிங்கத்திற்குப் படைத்து விட்டுப் பிறகுதான் உண்டார். இதே காலத்தில் பில்லா என்றொரு வேடன் அக்காட்டில் வசித்து வந்தான். தினந் தோறும் மிருகங்களை வேட்டையாடி தன்னால் கொல்லப்பட்ட மிருகங்களின் புலாலைச் சிவலிங்கத்திற்குப் படைத்துவிட்டு எஞ்சியதை தான் உண்பான். இவர்கள் இருவரும் ஒருவரை