பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/641

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாமன புராணம் 613 கூறிவிட்டு, பிறன் மனைவியை விரும்புவது எவ்வளவு தவறு என்பதற்கு ஒரு கதை கூறினான் பிரகலாதன். தணடா தண்டா என்ற தைத்திய மன்னன் ஒருமுறை தன் குருவான சுக்ராச்சாரியார் மகளைப் பார்த்தான். உடனே அவளை விரும்பி மணம் செய்து கொள்ளக் கேட்டான். அரஜா என்ற அப்பெண், என் தந்தையைக் கேள். மேலும் என் தந்தை உனக்கு குரு ஆவார். குருமகள் உனக்குத் தங்கை முறை ஆவாள். எனவே நீ விரும்புவது சரியன்று என்றாள். அதற்கு இசையாத அவன் மேலும் வற்புறுத்தவே என் தந்தை வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் அவருடைய உத்தரவைக் கேட்டுக் கொண்டு என்னை மணந்து கொள் என்றாள். தண்டன் குருவின் மகளைத் திருமணம் செய்து கொள்வது புதிதன்று. தந்தையின் உத்தரவுப்படிதான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகச் சித்ராங்கதாவின் கதையைக் கூறினான். சித்ராங்கதா, விஸ்வகர்மாவின் மகள், சுரதா என்ற ராஜ குமாரனை மணம் செய்து கொள்ள நினைக்கையில், விஸ்வகர்மா ஊரில் இல்லை. அவன் வரும்வரை காத்திராமல் இருவரும் மணம் செய்து கொண்டனர். வந்த விஸ்வகர்மா நடந்ததைக் கேள்வியுற்று, உன் கணவனைப் பிரிந்து வாழ்வா யாக என்று சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி ஆற்றுத் தண்ணிரில் சுரதா அடித்துக்கொண்டு போகப்பட்டான். விஸ்வகர்மா சாபப்படி, அவள் தனிமையில் வாழ நேரிட்டது என்று அவன் கூறியதும், தண்டா இடைமறித்து, இவ்வளவு தான் உனக்குத் தெரியும். இதற்கு மேல் நான் சொல்கிறேன். தண்ணிரோடு போன சுரதா கரை ஒதுங்கிப் பிழைத்துக் கொண்டான். சித்ராங்கதா ரிதத்வஜா என்ற முனிவரை