பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/642

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


814 பதினெண் புராணங்கள் அணுகி அவரது உதவியால் தண்ணிரில் சென்று தப்பித்துக் கொண்ட தன் கணவனை அடைந்து வாழத் தொடங்கினாள் என்று சொல்லி, சுக்ராச்சாரியார் மகள் வாயை அடைத்தான். இந்தக் கதையினைச் சொல்லி, தண்டா பிடிவாதமாக அரஜாவை மணந்து கொண்டார். யாத்திரையில் இருந்து மீண்ட சுக்ராச்சாரி, தண்டாவையும், அவன் நாட்டையும் எரித்து விட்டார். தண்டனுடைய நகரம் இருந்த இடம் சுக்ராச்சாரியாரால் எரிக்கப்பட்டதால் ஒரு காடு முளைத்தது. அதற்குத் தண்டகாரண்யம் என்ற பெயர் வந்தது. தண்டன் பெரிய தவறு இழைத்ததால், தண்டகாரண்யம் என்ற அவ்விடத்திற்கு தேவர்கள் செல்ல மாட்டார்கள். அந்தகன் தோல்வி பிரகலாதன் எவ்வளவு சொல்லியும் அந்தகன் புத்திமதி கேட்கவில்லை. பார்வதியை மணந்து கொள்ள வேண்டும் என்ற அவன் எண்ணம் மாறவில்லை. சம்பரன் என்ற அசுரனை சிவனிடம் தூது அனுப்பினான். சிவனிடம் சென்ற சம்பரன் “எங்கள் அரசன் அந்தகன் மூன்று லோகத்திற்கும் தலைவன். அவன் அதிகாரத்தின் கீழ்தான் மந்தர மலை இருக்கிறது. இதில் நீங்கள் வாழ விரும்பினால் பார்வதியை எங்கள் அரசிடம் ஒப்படையுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட சிவன், “எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நீ சென்று பார்வதியைக் கேட்டுவிடேன்” என்று கூறினார். சம்பரன் பார்வதியைப் பார்த்துக் கேட்க, அவர் சிவனும், அந்தகனும் போரிட வேண்டும் என்றும், வெற்றி பெறுபவரை மணந்து கொள்வதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் கூறினார். சம்பரன் சென்று அந்தகனிடம் நடந்தவற்றைக் கூற, அவன் போருக்குத் தயாரானான். மாபெரும் படையைத் திரட்டிக்