பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/643

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாமன புராணம் 615 கொண்டு மந்தர மலைக்கு வந்தான். சிவனுடைய கணங்கள் நந்தியின் தலைமையில் போர்புரிய வந்தன. மருத்துக்கள், ருத்திரர்கள், ஆதித்தர்கள் ஆகிய அனைவரும் சிவன் பக்கம் நின்றனர். விஷ்ணுவின் படைகளும், சக்கரமும் இப்பக்கத்தில் நின்றன. போர் தொடங்கியவுடன் நந்தியும் கணங்களும் அந்தகன் படைகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தன. ஆனால் ஒர் அதிசயம் நிகழ்ந்தது. கொல்லப்பட்ட அனைவரும் மீண்டும் போராட வந்தனர். சுக்ராச்சாரியின் சஞ்சீவினி மந்திரத்தால் இறந்தவர்கள் எழுப்பப்படுவதை சிவனிடம் நந்தி கூற, சுக்கிராச்சாரியாரைக் கொண்டுவருமாறு சிவன் பணித்தார். நந்தி சுக்ராச்சாரியாரை இழுத்து வர, சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கி விட்டார். சுக்ராச்சாரியார் இல்லாததால் அந்தகன் படைகள் வெகு விரைவில் காலியாயின. இறுதியில் அந்தகன் சிவனிடம் நேரிடையாகப் போரிட்டான். சிவன் அந்தகனை திரிசூலத்தால் குத்தி ஆகாயத்தில் ஏற்றிவிட்டார். சாகப்போகும் வேளையில் சிவனிடம் மன்னிப்புக் கேட்டு சிவபக்தனாக மாறிவிட்டான். அவனே மறுபிறப்பில் பிருங்கி முனிவனாகத் தோன்றினான். இதற்குப் பிறகு மருத்துக்களின் கதை முன்னரே மற்ற புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளதால் இங்கு எழுதப் பெறவில்லை, -- துந்துவின் கதை (ம7வலி கதையின் வேறுபட்ட கதை தனு, காசியப முனிவர் தம்பதிகளின் மகன் துந்து என்னும் அரக்கன். அவன் பிரம்ம தேவனைக் குறித்துத் கோரத்தவம் செய்து தேவர்களால் தனக்கு மரணம் ஏற்படாதவாறு வம் பெற்றான். துந்து இந்திரனை வென்று அப்பதவியைப் பெற்றான். இந்திரன் தேவர்களுடன் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் இருப்பிடமாகிய சத்திய லோகம் சென்று அடைந்தான்.