பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 பதினெண் புராணங்கள் நேர்மையான குணம் கொண்டவனாகவும் இருந்தான். வாணிபம் செய்யும் பொருட்டு செளராஷ்டிரா என்ற இடத் திற்குச் சென்றான். வழியே செல்லும் பொழுது, தர்மாவிடம் இருந்த பொருட்கள் அனைத்தும் களவு போயின. தர்மா பல இடங்களில் சுற்றிவிட்டு, முடிவில் rமி மரத்தின் அடியில் வந்து சேர்ந்தான். அம்மரத்தில் பறவைகள் எதுவும் இல்லை. அங்கு வந்த தர்மா களைப்பின் காரணமாக உறங்கிவிட்டான். உறங்கி எழுந்தவுடன், அங்கு ஒரு பேய் அந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டான். அந்தப் பேயைச் சுற்றி ஆயிரக்கணக்கான பேய்கள் உடன் வந்தன. முதலில் வந்த தலைவனாகிய பேய், தர்மாவை நோக்கி, “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டது. தர்மா தன் கதையைக் கூற, மிகவும் மனம் வருந்திய அப்பேய், அவனுக்கு விருந்தினைத் தயார் செய்யும்படி மற்றப் பேய்களிடம் கூறிற்று. அப்பேய் கூறிய மறுவிநாடி, இரு பாத்திரங்களில் பலவித உணவு மற்றும் தண்ணிர் கொண்டுவரப்பெற்றது. அவை அனைத்தையும் தர்மா உண்டு முடித்தான். உணவு உண்ட பின்பு, அந்தப் பேய்களின் தலைவனிடம், "இந்த உணவு, நீர் எங்கிருந்து வந்தது? நீங்கள் யார்? எவ்வாறு இந்த வனாந்திரத் திற்கு வந்தீர்கள்? உங்கள் கதையினைக் கூறுங்கள்” என்று கேட்க, அத்தலைவன் கூற ஆரம்பித்தான். “நண்பனே! முன் ஜென்மத்தில் நான், சகலா என்ற ஊரில் சோமசர்மா என்ற பெயருடன் வசித்து வந்தேன். வணிகம் செய்வது எனது தொழில். சோமஷ்ரவா என்ற பெயருடைய நண்பன் என் வீட்டின் பக்கத்தில் இருந்தான். அவன் விஷ்ணு பக்தன். நான் மிகவும் கஞ்சனாகவும், யாருக்கும் தானம் எதுவும் கொடுக்காமல் இருந்தேன். ஒரு சமயம், பல யாத்ரிகர்களோடு சோமசர்மாவாகிய நான் பல தீர்த்தங்கள் சென்றேன். அச்சமயம் பசியால் வாடிய