பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 619 ஒருவனுக்குச் சிறிது உணவும் நீரும் கொடுத்தேன். நான் கொடுத்த உணவு, பேய்களுக்காக வைக்கப்பட்ட உணவாகும். ஆதலால் நான் இறந்தவுடன், பேயாக மறுபிறப்பில் பிறந்தேன். போன ஜென்மத்தில், நான் உணவும், நீரும் தானமாகக் கொடுத்ததால், இந்த ஜென்மத்தில் எனக்கு உணவுக்கும் நீருக்கும் பஞ்சமில்லை. அத்துடன் ஒரு குடையையும் தானமாகக் கொடுத்திருந்தேன். அதுவே கூடிமி மரமாக மாறியுள்ளது. மற்றவர்கள் எந்த தானமும் முன் ஜென்மத்தில் செய்யாததால், இங்கு பேய்களாக மாறி உலவுகின்றனர். உடனே தர்மா, உங்களை எவ்வாறு இந்த வாழ்க்கையி னின்று விடுவிப்பது என்று கேட்டான். சோமசர்மா கூறியபடி தர்மா கயைக்குச் சென்று சோமசர்மாவின் இறுதிக் கடனைச் செய்ய, சோமசர்மாவும், அவன் நண்பர்களும் சாபத்தினின்று விடுதலை செய்யப்பட்டனர். தர்மா அதன் பிறகு சிலகாலம் சொர்க்கத்தில் இருந்து, புரூரவா அரசனாகப் பிறந்தான். உபமன்யுவும், ரீதமாவும் முன்னொரு காலத்தில் விதமன்யு என்றொரு பிராமணன் வசித்து வந்தான். அவன் மனைவி ஆத்ரேயி. இவர்களுக்கு உபமன்யு என்றொரு மகன் இருந்தான். அவர்கள் மிகவும் ஏழையாக இருந்த காரணத்தினால், அக்குழந்தைக்குப் பாலினைக் கொடுக்க அவர்களால் முடியவில்லை. ஆதலால் ஆத்ரேயி கஞ்சி தயாரித்து, அதனைப் பால் என்று கூறி உபமன்யுவைக் குடிக்குமாறு செய்து வந்தாள். ஒரு சமயம், உபமன்யுவும், அவன் தந்தையும் செல்வந்த னாகிய ஒரு பிராமணன் வீட்டிற்குச் சென்றனர். உபமன்யு, அதன்பிறகு தன் தாய் கொடுத்த கஞ்சியைக் குடிக்க மறுத்தான். வேறுவழி தெரியாத ஆத்ரேயி, மகனிடம் “நீ நல்ல பாலினைக் குடிக்க விரும்பினால், சிவனை ஜெபிக்க வேண்டும்.