பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 பதினெண் புராணங்கள் ஒருமைப்பாட்டை மிகவும் அழுத்தமாகக் கூறுவது இப்புராணமே ஆகும். இறைவன் ஒருவனே ஆனாலும் அவனுக்குப் பல பெயர்கள் இருப்பது போல, விஷ்ணு சிவன் ஆகிய இரு பெயர்கள் இருப்பினும், இருவரும் ஒருவரே ஆவர் என்றும், வேற்றுமை பாராட்டுவது தவறு என்றும் கூறுவது இப்புராணமே ஆகும். சக்தி வழிபாடு செய்யும் சாக்தம் வேறு அன்று என்றும், சக்தி என்பது சக்திமானிடம் இருப்பது போல சக்தி எனப்படும் பெண் தெய்வமும், சிவனிடம் அடக்கம் என்றும் இப்புராணம் கூறுகிறது. நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் கூடி யாகம் செய்ய ஆரம்பித்தனர். அங்கு இருந்த லோமஹர்ஷனரைப் பார்த்து, “வேதவியாசரின் சீடராகிய தாங்கள் எல்லாப் புராணங்களைப் பற்றியும் அறிந்தவர். எங்களுக்குக் கூர்ம புராணம் பற்றி விளக்க வேண்டும்” என்று கேட்க, லோமஹர்ஷனர் கூற ஆரம்பித்தார். கூர்ம புராணம், மஹா புராணங்களில் பதினைந்தாவது புராணமாகும். லட்சுமியின் தோற்றம் வெகு காலத்திற்கு முன்னர், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பினை நாண் ஆகவும் வைத்துக் கடைய ஆரம்பித்தனர். மந்தர மலை தங்குவதற்கு விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து, தன் முதுகில் மலையைத் தாங்கிக் கொண்டார். கடலைக் கடைந்த பொழுது, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி வெளிப்பட்டு, விஷ்ணுவுடன் கலந்தார். இந்திரனும், மற்ற தேவர்களும், முனிவர்களும் லட்சுமியின் அழகைக் கண்டு திகைத்து, 'யார்’ என்று