பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 627 அந்த மூலப் பொருளையே குறிக்கோளாகக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். இந்திரத்துய்மன் வினா "ஒ ஜனார்தனா! எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சத்தியப் பொருள் யாது? முழு நிறைவுடன் கூடிய பொருள் யாது? பயன் என்று சொல்லுகிறாயே, அது எது? அனைத் திற்கும் மூலகாரணம் யாது? நீ யார்? உன் தொழில் யாது?” பிரபுவின் பதில் "மிக உயர்ந்த சத்தியப் பொருள் என்பது பரப்பிரம்மமே ஆகும். எவ்வித மாறுதலும், திருத்தி அமைக்கப்படும் இயல்பும் இல்லாததே அப்பொருளாகும். நிரதிசய இன்பம் என்பதும் அதுவேயாகும். அஞ்ஞான இருளைக் கடந்து நிற்கும் ஒளிப் பிழம்பு அதுவே ஆகும். அதனுடைய என்றும் அழியாப் புகழும், பிரபஞ்சத்தை ஆளும் இயல்பும், முழு நிறைவுடன் கூடிய அதன் சிறப்பாகும். மூலகாரணம் என்பது வெளிப்படாமலும், அழியாமலும், துய்மை கெடாமலும் உள்ள பெருஞ்சக்தியே ஆகும். அச்சக்தியின் பயன் அல்லது விளைவு இப்பிரபஞ்சமே ஆகும். எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் நிற்கும் ஆத்மன் நானே ஆகும். இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் ஆகியவையே என்னுடைய செயல்கள் என்று சொல்லப்படும். ஒ பிராமணா! சொல்லப்பட்ட அனைத்தையும் தவறாமலும், முழுவதுமாகவும் அறிந்து கொண்டு என்றுமுள்ள பரம்பொருளை வழிபடுவாயாக. அவ்வழிபாடு என்பதே விதிக்கப்பட்ட செயலைத் தவறாமல் செய்வதே ஆகும். இச் செயல்களைச் செய்யும் பொழுது எவ்விதமான பயனையும், சிறிதும் எதிர்பாராமல் செயல்களில் ஈடுபடுவதே முக்கியமான தாகும்.