பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 பதினெண் புராணங்கள் பிரபஞ்ச உற்பத்தி அடுத்தபடியாக விஷ்ணு, பிரபஞ்சத் தோற்றம் பற்றிக் கூறத் துவங்கினார். துவக்கத்தில் பரப்பிரம்மம் மட்டுமே இருந்தது. எங்கும் நிறைந்ததும், ரூப, அரூபமானதும், ஆதியும் அந்தமும் இல்லாததும், சொற்களால் விவரிக்க முடியாததும் ஐம்புலன்களால் உணர முடியாததும் ஆகியது பரப்பிரம்மம். இப்பரப்பிரம்மத்தினின்று தோன்றியவர்களே படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும், அழிக்கும் தொழிலைச் செய்யும் சிவனும் ஆவர். பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர் எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் ஒரு பொன்னாலாகிய முட்டை தோன்றியது. அம்முட்டை மிகப் பெரியதாகி அதில் படைக்கும் கடவுளாகிய பிரம்மன் தோன்றினார். அவருடன் உலகத்தில் உள்ள சர அசரப் பொருட்கள் யாவும் தொடக்க நிலையில் இருந்தன. தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் முதலானவை அவற்றுள் இருந்தன. பொன்னாலாகிய முட்டையினின்று தோன்றியவர் பிரம்மன் என்பதால் அவருக்கு ஹிரண்யகர்ப்பன்' என்ற பெயர் உண்டாயிற்று. பிரம்மனே முதன் முதலில் தோன்றியவர். அவருக்கு நான்கு முகங்கள் உண்டு. அவர் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டார் என்பதால் சுவயம்பு என்ற பெயரும் ஏற்பட்டது. இதை அடுத்து, கூர்ம புராணம் தேவர்கள் காலம், யுகங்கள் பற்றிப் பேசுகிறது. இவை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) வராக அவதாரம் பத்ம கல்பத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு உலகம் நீரில் மூழ்கி இருந்தது. விஷ்ணு நீரின் மேல் உறங்கிக்