பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 629 கொண்டிருந்தார். ஆயிரம் மகாயுகங்கள் விஷ்ணு உறங்கினார். புதிதாகப் பிரபஞ்சத்தைப் படைக்க எண்ணினார் பிரம்மன். ஆனால் பூமி நீரில் மூழ்கி இருந்ததால், படைப்புத் தொழிலைச் செய்ய முடியாத பிரம்மன், விஷ்ணுவிடம் சென்று உதவி வேண்டினார். விஷ்ணுவும் வராக அவதாரம் எடுத்து, பாதாளலோகம் சென்று பூமியைத் தேடினார். கடைசியாக பூமியைக் கண்டு பிடித்துத் தன் கொம்புகளுக்கிடையே வைத்து நீருக்கு மேலே தூக்கி வந்தார். நீரின் மேல் பூமியை வைத்தவுடன் மிகப் பெரிய படகினைப் போல் பூமி நீரில் மிதக்கலாயிற்று. பிரபஞ்ச தோற்றம் தொடர்ச்சி பிரம்மன் முதலில் மானசீக புத்திரர்களாக ஐந்து மகன்களைப் படைத்தார். அவர்கள் சனகர், சனாதனர், சனந்தன, கிரது, சனத்குமாரர் ஆகியோர் ஆவர். இவர்கள் ஐவரும் முனிவர்களாகி விட்டமையின், மனித உற்பத்தி யைப் பெருக்க முடியவில்லை. ஆதலால் இன்னும் சில உயிர் களை பிரம்மன் படைத்தார். அதற்கு முன்பாகத் தவத்தில் ஈடுபட்டார் பிரம்மன். அவர் தவம் எப்பலனும் அளிக்க வில்லை. ஆகையால் கோபமும் சோர்வும் அடைந்து கண்ணிர் சிந்தினார். அக்கண்ணிரிலிருந்து சிவன் தோன்றினார். அவரை வணங்கிய பிரம்மன், சிவனிடம் சிரஞ்சீவிகளைப் படைத்தலை நிறுத்திவிட்டு, மூப்பினாலும், இறக்க நேரிடுகின்ற உயிர் களாகப் படைக்கவும் என்று கூறினார். இதைக்கேட்ட சிவன், "மூப்பு நோய் இரண்டும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியவை. அவற்றை அனுபவிக்க கூடிய உயிர்களை என்னால் படைக்க முடியாது” என்று கூறிவிட்டார். உடனே பிரம்மன் தானே படைப்புத் தொழிலை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, தண்ணீர், நெருப்பு ஆகாயம், காற்று, ஆறு, கடல், மரங்கள் அனைத் தையும் படைத்தார்.