பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 பதினெண் புராணங்கள் அடுத்து பிரம்மன் பதினோரு பேரை மானசீக மக்களாக உற்பத்தி செய்தார். அவர்கள் முறையே- மரீச்சி, பிருகு, ஆங்கீர புலஸ்தியா, புலவிதலை, இரது கட்சா, அத்ரி, வசிய்யு, தர்மா என்போர் உடன் சங்கல்யா அதன் பிறகு தேவர்கள், அசுரர்கள், பித்ருக்கள், மனிதர்கள் என்ற நால்வகையினரும் படைக்கப் பட்டனர். இவர்களைப் படைத்த பிரம்மன் தன் உடலை இரண்டாகப் பிரித்து ஒர் ஆண் உருவத்தையும், பெண் உருவத்தையும் படைத்தார். சுவயம்புமனு, சத்தரூபா என்ற பெயர் கொண்ட அவர்கள் பிரியவ்ரதா, உத்தானபாதா என்ற மகன்களையும், பிரசுத்தி, அகுத்தி என்ற பெண்களையும் படைத்தனர். பிரசுத்தி, தட்சணை மணந்து இருபத்தி நான்கு பெண்களைப் பெற்றாள். அதில் பதின்மூன்று பேர், பிரம்மனின் மகனாகிய தர்மதேவனையும், சியாதி பிருகுவையும், சதி சிவனையும், சம்புதி மாரீச்சியையும், ஸ்மிருதி ஆங்கீரஸா வையும், பிரிதி புலஸ்தியரையும், ஷமா புலவிதலையும், சண்ணடி கிரதுவையும், அனுசுயை அத்ரியையும், உர்ஜா வசிட்டரையும், ஸ்வாஹா அக்னியையும், ஸ்வதா பித்ரி தேவனையும் மணந்தனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம், 'ஐயனே! எங்கள் குழப்பத்தை நீக்க வேண்டும் என, பிரம்மன் விஷ்ணுவின் உடலில் இருந்துதான் தோன்றியதாகக் கூறினார். பிறகு பிரம்மன் பொன் முட்டையினுள் இருந்துதான் தோன்றியதாகக் கூறினார். அதேபோல் சிவன் பிரம்மனின் கண்ணிரிலிருந்து தோன்றியதாகக் கூறினர்கள். ஆனால் நாங்கள் வேறு மாதிரிக் கேள்விப்பட்டோம். இதில் எது சரி. எது தவறு என்று தயை கூர்ந்து சொல்ல வேண்டும் என்று பணிவுடன் கேட்டனர். விஷ்ணுவும் இதில் குழப்பம் ஏற்பட எதுவுமில்லை. முதன் முதலில் பிரபஞ்ச உற்பத்தியின்