பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம புராணம் 37 சிவபெருமான் வெளிப்பட்டு, “பில்லாவையும் அவன் அன்பையும் நீ தெரிந்து கொள்ளவில்லை. நாளை வந்து பார்” என்று கூறி மறைந்தார். மறுநாள் வேதா வந்தபொழுது லிங்கத்தின் உச்சியில் இரத்தம் ஒழுகிற்று. அவர் அதைத் துடைத்துவிட்டு வழக்கம் போல தன் பணிகளைச் செய்து விட்டு மறைவாக இருந்தார். பின்னர் வந்த பில்லா லிங்கத்தின் தலையில் இரத்தம் ஒழுகுவதைக் கண்டு பதைத்துவிட்டான். தான் ஏதோ குற்றம் செய்ததனால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டது என்று வாய்விட்டுக் கூவி பில்லா தான் அறியாமல் செய்த குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே அம்பை எடுத்துத் தன்னுடைய உடம்பில் பல இடங்களிலும் குத்திக் கொண்டான். இரத்தம் பெருகியது. உடனே சிவபிரான் வெளிப்பட்டு வேதாவைப் பார்த்து, “நீ சாத்திரப்படி செய்கிற பூசைக்கும் அன்பே வடிவான இவன் பூசைக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தாயா? சாத்திரப்படி வழிபட்ட நீ பிரசாதத்தை என் முன் படைத்தாய். அன்பினால் வழிபட்ட இவன் தன் உடல், பொருள், ஆவி மூன்றையுமே எனக்குப் படைத்துவிட்டான். சாத்திர வழிபாட்டிற்கும், அன்பு வழிபாட்டிற்கும் உள்ள வேற்றுமையைத் தெரிந்து கொள்” என்று கூறி மறைந்தார். பில்லா சிவனை வழிபட்ட இடம் 'பில்ல தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. பெரிய புராணத்தில் வரும் கண்ணப்பர் வரலாற்றை இதனோடு ஒப்பிட்டுக் காண வேண்டும்) தர்மத்தின் வழி நடந்தால். பவனா என்ற ஊரில் கெளதமன் என்பவன் வாழ்ந்து வந்தான். பிறப்பால் பிராமணன் ஆயினும், அவன் தாயின் தூண்டுதலால் எந்தத் தீய காரியத்தையும் அஞ்சாமல் செய்யும் துணிவு பெற்றிருந்தான். அப்படி இருந்தும் வைசிய குலத்தைச்