பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 பதினெண் புராணங்கள் வரும் வழியின்றித் தவித்தார். முடிவில் விஷ்ணுவின் கொப்பூழில் தோன்றி இருந்த தாமரை மலரின் தண்டின் வழியே வெளியே வந்தார். விஷ்ணுவிடம் கோபம் கொண்டு, “என்னை எவ்வாறு நீ சிறை வைக்கலாம்” என்று கேட்க, விஷ்ணு, "பிரம்மனே! கோபம் வேண்டாம். உன்னுடன் சிறிது நேரம் விளையாடவே இவ்வாறு செய்தேன். மிக உயர்ந்தவராகிய உம்மைச் சிறை வைக்க யாருக்கும் தைரியமில்லை. என்னை மன்னிக்கவும்" என்று கூறி எனக்கு ஒரு வரம் தரவேண்டும். அதன்படி என்னுடைய கொப்பூழினின்று தோன்றிய நீ என்னுடைய மகன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டார். பிரம்மனும் அதற்குச் சம்மதித்து நாம் இருவரும் சமாதானமாகி விடுவோம். ஏனெனில் நாம் இருவருமே பரப்பிரம்மத்தின் பகுதிகளாவோம் என்று கூறினார். உடனே விஷ்ணு, 'சிவனை மறந்துவிட வேண்டா. உன்னுடைய வார்த்தைகளைக் கேட்டால் சிவன் கோபிப்பார்’ என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவன் அங்கு வந்தார். சடைமுடியும், மூன்று கண்களையும் கொண்ட சிவன், கையில் திரிசூலம் ஏந்தி இருந்தார். உடனே பிரம்மன் இவர் யார்? இவரைப் பார்த்தால் திடீரென்று முன்னுக்கு வந்தவன் போல் தெரிகிறது என்றார். விஷ்ணு, பிரம்மனைச் சமாதானப்படுத்தி, தெய்விகக் கண்களை பிரம்மனுக்குக் கொடுத்து சிவனுடைய உண்மையான சொரூபத்தைக் காணுமாறு செய்தார். பிரம்மனே! இவர் யார் என்று தெரியுமா? இவர்தான் என்றும் அழியாதவராய், ஒளிப்பிழம்பாய், ஆதியும், அந்தமும் இல்லாதவராய் விளங்கும் மகாதேவராவார். இவர்தான் சங்கரர் (மங்களம் செய்பவர்), சம்பு நலங்களைப் பொழிபவர்)